Posted by: Deepak Venkatesan on: March 19, 2005
எனது நண்பர் கவிஞர் புரட்சித்தேனீ எழுதிய கவிதை ஒன்றில் இந்த வரிகள். நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று யாரும் வீட்டில் நரி வளர்ப்பதில்லை. பூனை குறுக்கே சென்றால் ஆபத்து என்று யாரும் வீட்டில் பூனை வளர்க்கத் தயங்குவதில்லை. விசாரித்துப் பார்த்ததில், தம்மிடம் யாரோ சொன்னதாகச் சொன்னார். இருந்தாலும், தினம் தினம் இப்படிப்பட்ட ஹாஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை. நாமெல்லாம் எந்த அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறோம் என்பது எனக்கு இன்னும் விளங்கியபாடில்லை. அமாவாசை அன்று காக்கைக்குப் படையல் வைக்க ஒரு [...]
Posted by: Deepak Venkatesan on: March 16, 2005
மூச்சு விடாமல் பாடுபவர்களுக்கு நம்மூரில் என்றுமே மவுசு உண்டு. டிஜிட்டலில் குரல்களைச் செதுக்கும் இக்காலத்தில் மூச்சு விடாமல் பாடுவது ஒன்றும் மலையை நகர்த்துகிற செயல் இல்லைதான். இருந்தாலும் பள்ளியில் படித்த சமயம், நண்பன் ஒருவன் SPB போல மூச்சு விடாமல் பாடி அரங்கில் கைத்தட்டல் வாங்கிய போது, என் வயிறு அண்ணாமலை தீபம் மாதிரி சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஷங்கர் மஹாதேவனின் Breathless வரிகள் அனைத்தும் எனக்கு அத்துப்படிடா என்று பீத்திக் கொள்வான் இன்னொருவன். (அடியேன் [...]
Posted by: Deepak Venkatesan on: March 14, 2005
கல்லூரியில் படித்த போது, செயற்கை அறிவு (Artificial Intelligence) தொடர்பாகச் சில விஷயங்கள் படித்து வந்தேன். பொதுவாகவே, அடிப்படைக் கோட்பாடுகளை விட, extraordinary-யான விஷயங்களில் தான் மாணவர்கள் முதலில் மூக்கை நுழைப்பார்கள். அடிப்படைகள் விளங்கியதோ இல்லையோ, அற்புதங்கள் நிகழ்த்திவிட வேண்டும் என்று துடிப்பார்கள். Fuzzy logic, Neural Network, AI என்றால், மாணவர்களுக்கு அது ஒரு கனவுலகம். Fuzzy-யில் எப்படியாவது ஒரு project செய்து விடுவேன் என்று கொள்கை கோஷமிட்டுத் திரிவார்கள். ரிஸர்ச், டெவலப்மெண்ட், கிரியேட்டிவிட்டி, இன்னொவேஷன், [...]
Posted by: Deepak Venkatesan on: March 12, 2005
பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எனது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் சிருங்கேரி சென்றிருந்தேன். அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எனக்கு, கோடை விடுமுறையில் ஊருக்குச் செல்வதென்றால் ஒரே கொண்டாட்டம் தான். ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருந்த அந்தச் சிறிய ஊரில் எங்கு பார்த்தாலும் வயலும் வரப்பும் வாய்க்காலுமாய் இருக்கும். நண்பர்களோடு ஆற்றில் குளிப்பது, காட்டில் அலைவது, சந்தைக்குச் செல்வது என்று பொழுது போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்போம். சரியான சாப்பாட்டு ராமனான எனக்கு, அத்தை விதம் விதமாகப் [...]
Posted by: Deepak Venkatesan on: March 10, 2005
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எனக்கு ஒரு சின்ன ஆசை. ஒரு மாடர்ன் பிகருக்கு பிராக்கட் போட வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் கூடச் சுலபமாக நிறைவேறியிருக்கும். ஆனால் நான் ஆசைப்பட்ட விஷயம் அவ்வளவு எளிதானதல்ல. அது என்ன ஆசை என்கிறீர்களா? வேறொன்றுமில்லை… ஒரு செல்லுலர் போன் வாங்க வேண்டும் என்ற ஆசை தான் எனக்கு. வெற்று டாம்பீகம் எதற்கு என்று அடக்கமாக இருந்த எனக்கு, எல்லோரும் செல் வைத்துக்கொண்டு, காற்றோடு கதைபேசுவதைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் [...]