Posted by: Deepak Venkatesan on: March 9, 2005
நேற்று காலையில் 'தினமணி' படிக்கும் போது, மதியின் 'அடடே!' column கண்ணில் பட்டது. இப்பத்தான்யா பீஹார் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொடுக்காமல் விட்டிருக்கிறார்கள் – குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்திருக்கிறது. அவர் தான் பீஹாருக்குச் சரியான ஆள் – என்று இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பது போல cartoon போட்டிருந்தார். அதுவும் வாஸ்தவம் தான். எங்களைத் தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று லாலு, பாஸ்வான், பாஜக என்று எல்லோருமே [...]
Posted by: Deepak Venkatesan on: March 9, 2005
நானும் எத்தனையோ தடவ blog பண்ண முயற்சி செஞ்சி, அப்றம் இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு முடிவு பண்ணி அப்டியே விட்டிருக்கேன். ஆனால் தமிழ்ல blog பண்ண ஆரம்பிச்சப்றம் தான் தொடர்ந்து எழுதலாமேன்னு தோண்றது. நினைக்க்ற விஷயத்த அப்டியே சொல்ல தமிழ்ல தான் முடிது. புதுசு புதுசா எழுத matter கிடைக்குது. எனக்கு எழுதணும்ங்க்ற ஆசையும் பூர்த்தி ஆகுது. இதை யார் படிக்றாங்க்ளோ இல்லையோ, நான் எழுதுறதுல எனக்கு ஒரு சந்தோஷம். நிச்சயமா தொடர்ந்து எழுதுவேன். local [...]
Posted by: Deepak Venkatesan on: March 9, 2005
கண்ணதாசன் இன்று இருந்தால் கண்ணீர்தாசன் ஆகியிருப்பார். இன்றைய சினிமாப் பாடல்கள் (?), பாடல்கள் என்கிற status-இலிருந்து இறங்கி, கதாநாயகன், கதாநாயகியின் காம லீலைகளில் இடம்பெறும் முணுமுணுப்புகளாக மாறி வருகிறது. இது வரவேற்கத்தக்கதா இல்லையா என்பதை விடுங்கள். கவிஞர்களின் கற்பனை வறண்டு விட்டதா, அல்லது அஷ்டகோணத்தில் வளர்ந்து விட்டதா என்பது தான் புரியாத புதிராய் உள்ளது. பாடல்களில் இருந்த அந்த சூட்சமம், நெளிவு எல்லாம் மாறி, ஒரேடியாக வெடித்துச்சிதறும் உணர்ச்சிக் கொப்பளங்களாகி விட்டன என்றுதான் கருதத் தோன்றுகிறது. இங்கே [...]
Posted by: Deepak Venkatesan on: March 9, 2005
என்னுடைய முந்தைய வலைப்பதிவை எழுதும் போதே சந்திரமுகி படத்தின் Audio ரிலீஸ் ஆகிவிட்டிருந்தது. படம் ரிலீஸ் ஆகிற நாளன்றே கடைக்கு ஓடி Cassette/CD வாங்கிக் கேட்கும் பழக்கம் எனகில்லை. நண்பர்களின் comments என்னவென்று தெரிந்து, ரேடியோ மிர்ச்சியில் பாட்டைக் கேட்டு பரவசப்படும் ரகம் நான். நண்பர் கதிர் எனக்கு அனுப்பியருந்த SMS திரைப்பாடல் விமர்சனம் மிகுந்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கி உள்ளது. பாடல்கள் நன்றாக இருப்பதாக எழுதியிருந்தார். சந்திரமுகி வெற்றி பெற என் வாழ்த்துகள். என்னதான் மணிரத்னத்தின் Intellingent [...]
Posted by: Deepak Venkatesan on: March 9, 2005
செப்டம்பர் 2004-இல், மின்னஞ்சல் வழியாக சில நண்பர்கள் நாங்கள் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது, EEE Dept-ஐச் சேர்ந்த நண்பர் சீனிவாஸ் மனதில் ஒரு சிந்தனை உதித்தது. நம் எல்லோருக்கும் சமுதாய மேம்பாடு, நலிந்தோர் நலன், பரோபகாரம் போன்ற விஷயங்களில் நாட்டம் உண்டு. நாம் ஏன் சமூக நல இயக்கம் ஒன்றைத் தொடங்கக் கூடாது என்று நண்பர் எண்ணினார். இக்கருத்தை எங்களிடம் எடுத்து வைத்தார். அனைவரின் இசைவுடனும், ஆதரவுடனும் தொடங்கிய சமூக நல இயக்கம் தான் தியா [...]