Posted by: Deepak Venkatesan on: May 31, 2005
பின்புறத்தில் சற்றே பெருத்து, கிக் ஸ்டார்ட் செய்யப்படும் ஒரு மாதிரியான ஆட்டோக்களை என் சொந்த ஊரில் தான் பார்த்திருக்கிறேன். கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம், பெயர் 'கொப்பா'. Michael Crichton-னின் State of Fear-இல் எவ்வளவு தான் இயற்கையைத் திட்டி, கன்னாபின்னாவென்று விமர்சித்திருந்தாலும், நாலாபுறமும் மலைகள் மலைகள் என்று இருக்கிற ஊரைப் பார்க்கும் போது, மனம் அதில் லயித்து விடுவதில் ஆச்சரியமில்லை. முணுமுணுப்பது போல் வேகமாகப் பேசுகிற மைசூர் கன்னடம், மணிரத்தினம் பட [...]
Posted by: Deepak Venkatesan on: May 13, 2005
ஆங்கில எழுத்தாளர் Oscar Wilde எழுதிய சிறுகதையான "The Sphinx without a Secret" என்பதைத் தழுவி இந்தச் சிறுகதையை எழுதியுள்ளேன். கதையை அப்படியே மொழிபெயர்க்காமல், நமது சூழல்களுக்கு ஏற்ற விதத்தில் தமிழ்ப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பட்டதால், கதையை remake செய்தேன் எனலாம். இருப்பினும், கதைக் கரு, ஆஸ்கர் வைல்டினுடையது தான். * * * * * அன்று மாலை, திநகர் கண்ணதாசன் சிலைக்கு எதிரே உள்ள தெருவில் நான் தைக்கக் கொடுத்த செருப்பை [...]
Posted by: Deepak Venkatesan on: May 8, 2005
கடைசியில் ஒரு வழியாக, என்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மிகுந்த ஆரவாரம், மேளதாளம், பாராட்டுகள், பரிசுகள், கூத்து, பாட்டு என்று கல்லூரியே அமர்க்களப்பட்டு விட்டது என்று சொன்னால், அது சத்தியமாகப் பொய்தான். நான்கு ஆண்டுகளில் இதுவரை எழுதிய அறுபது பேப்பர்களில், கட்டக்கடைசியான பேப்பரை முடித்த நிறைவோடு, அதன் சாதக-பாதகங்களை டிஸ்கஸ் செய்துகொண்டே, நண்ப-நண்பிகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, வீட்டுக்கு வந்தாகிவிட்டது. ஸ்ட்யூடண்ட் வாழ்க்கையிலிருந்து, க்ராஜுவேட் வாழ்க்கைக்கு இப்பொழுதுதான் ப்ரொமோட் ஆகியிருக்கிறதால், இந்தப் புதிய அவதாரத்தின் கடமை, கண்ணியம், [...]
Posted by: Deepak Venkatesan on: May 3, 2005
“உலகம் அழியப் போகுது சார்” என்று திடீரென்று எங்கிருந்தோ ஒருவர் உங்களிடம் வந்து சொன்னால் எப்படி இருக்கும்? சொன்னார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்! சொல்லிவிட்டு, ஏதோ சில மதப் பிரச்சார நோட்டீஸையும் கொடுத்துவிட்டு வேகமாக ஓடினார், அடுத்திருந்த பெண்மணியை நோக்கி! நூறு டிகிரி சுட்டெரித்த வெயிலையும் மீறின என் கோபத்தை அடக்கிக் கொண்டு அவரை லேசாக முறைத்துவிட்டு நகர்ந்தேன். பொதுவாக இது மாதிரி கண்ட இடத்திலெல்லாம் துண்டுப் பிரச்சார சீட்டுகளைக் கையில் கொடுத்து உபத்திரவிக்கும் நபர்கள், [...]