Amusingly Simple

Archive for May 2006

அண்மைக் காலங்களில் திரைப்படங்களில் மட்டுமே கலக்கி வந்த ஹீரோயின்கள் பலர், இம்முறை தேர்தலில் கட்சிகளின் அமோக ஆதரவால், தமிழகமெங்கும் அரசியல் மேடைகளிலும் கலக்கியது செய்தி. ஆனால், இங்கே நான் குறிப்பிடுவது சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகைகளைப் பற்றியல்ல… நிஜமாகவே சுழற்றியடிக்கும் சூறாவளிகளைப் பற்றி. முதலில் அமெரிக்காவில் ‘காத்ரினா’ என்ற சூறாவளி தாக்கியது. அதன் பிறகு ‘ரீட்டா‘. அதே மூச்சோடு நம்மூரிலும் ‘மாலா‘, ‘ஃபனூஸ்’ என்று தன் பங்கிற்கு பெண் புயல்கள் சக்கைப் போடு போட்டன. இப்போது சீனாவில் [...]

சுஜாதாவின் சில்வியா

Posted by: Deepak Venkatesan on: May 16, 2006

வெகு நாள் கழித்து விகடனில் சுஜாதா அவர்கள் புதிய தொடர்கதை எழுதுகிறார் என்று கேள்விப்பட்ட அடுத்த நொடி ஓடிச் சென்று விகடன் வாங்கி விட்டேன். சுஜாதா அவர்களின் எழுத்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்பதால் பல எதிர்பார்ப்புகள் எனக்கு. அதிலும் கணேஷ் வசந்த் நாவல் என்பதால் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகவே இருந்தது. வழக்கம் போல் கலர் கலராக படம் போட்டிருந்த விகடனின் டெம்ப்டேஷனை எல்லாம் தாண்டி, சுஜாதா பக்கத்திற்கு வந்தேன். கிடைத்தற்கரிய செப்பேடு கிடைத்துவிட்டாற்போல வாசிக்கத் [...]

‘ஏவிசினியா மெரினா’ என்று அந்தப் படகோட்டி, மேங்குரோவ் மரங்களின் அறிவியல் பெயரைக் கூறிய போது, நான் ஒரு கணம் வாயடைத்துப் போனேன் – நானே பள்ளியில் படித்து மறந்து போன இப்பெயரை படிப்பறிவில்லாத இவர் இவ்வளவு அழகாகச் சொல்கிறாரே என்று. பின்னர் தான் தெரிந்தது, இப்பெயரை அங்குள்ள படகோட்டிகள் யாவரும் சொல்வார்கள் என்று. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதி, கோடை வெயிலைத் தணிக்கும் ஒரு இனிய மாலைப் பொழுது அனுபவமாகவே அமைந்தது.  சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் [...]

எல்லோருக்கும் நேராக வைத்த மையை எனக்கு மட்டும் கோணலாக வைத்து விட்டார்களே என்று தேர்தல் மைய அதிகாரி மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. அதிலும் என் என் நடுவிரலில் வேறு சிறு சிந்தல். அப்புறம், என் அலுவலக நண்பரின் விரலைப் பார்த்த பின்பு தான் எனக்கு ஆறுதல். அவர் கை முழுவதும் ஒரு மினி கோலமே போட்டுவிட்டிருந்தார்கள் தேர்தல் மைய அதிகாரிகள். முதல் முதலாக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ­– ஏதோ இந்தியாவிற்கே ஜனாதிபதி ஆகிவிட்டது [...]

முதல் மசாலா

Posted by: Deepak Venkatesan on: May 6, 2006

அது ஏனோ தெரியவில்லை… நான் சாலையில் மோட்டார் பைக்கில் போகிற போது, நிச்சயமாக இரண்டு ஆட்டோக்கள் எனக்கு வழிவிடாமல் எனக்கு முன்னால் போவது வழக்கமாகிவிட்டது. இல்லை, ஹைதர் காலத்து ஸ்கூட்டர் ஒன்றை ஓட்டிக் கொண்டு செல்கிற நபர், தன்னைத் தாண்டிச் செல்லும் வாகனங்களையெல்லம் பொருட்ப்டுத்தாமல், மிகுந்த சிரத்தையோடு ஜாக்கிரதையாகத் தன் வாகனத்தை மெல்ல மெல்ல நகர்த்துவார். அதுவும் இல்லை என்றால், ஜுராஸிக் பார்க்கில் ஆடி அசைந்து சர்வகாலமும் தனக்கே உரியதாக எண்ணி நடைபோடும் வெஜிட்டேரியன் டைனோசர்கள் போல [...]


Deepak Venkatesan