Posted by: Deepak Venkatesan on: November 12, 2006
ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து – ‘E’ தான். ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பது போல், ‘E’ இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி.
E – ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, குடலுக்குள் இருக்கிற ‘E’.coli பாக்டீரியா தான் காரணமாக இருக்கிறது. இந்தத் தகவலையெல்லாம் என் கணிப்பொறியில் உள்ளீடு செய்வதற்கு E-கலப்பை என்ற மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறேன். ‘ஈ’ என்ற பெயரில் நயந்தாரா நடித்தப் படம் வந்து சக்கை போடு போடுகிறது. E என்ற பெயரில் கணிப்பொறி மொழி கூட உள்ளது.
கணிதத்தில் ‘e’ என்பது natural logrithms-ஐக் குறிக்கிறது. பள்ளிக்கூடத் தேர்வில் இந்த விஷயத்தைப் பக்கத்தில் இருக்கும் பையனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதினால் ‘ஈ’ அடிச்சான் காப்பி என்கிறார்கள். அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் புகழ் பெற்றதே ‘E’-யின் மதிப்பைச் சொல்லித்தான். இசையின் ஏழு ஸ்வரங்களில் ‘E’ தான் மூன்றாவது ஸ்வரம். ‘E’ என்ற எழுத்து குறிக்கிற electric field இல்லையேல் மின்சாரம் இல்லை, மின்னணுவியல் இல்லை, மின்காந்த அலைகள் இல்லை, டிவி, ரேடியோ, மொபைல், இணையம் – எதுவுமே இல்லை.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? E என்பது நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வதற்குச் சமீபத்தில் தான் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கவிதை எங்கேயோ படித்திருக்கிறேன் (தினத்தந்தி – குடும்ப மலர் என்று நினைக்கிறேன்). இன்னும் வரிகள் நினைவிலிருக்கிறது. வ்டித்தவர் பெயர் நினைவில்லை.
ஒன்றாய் இருந்த போது ஒட்டத் தெரியாத இதயம்,
ஒதுங்கிச் இருக்கும் போது ஒன்றிடத் தவிக்கிறது.
அது போல், E-யின் அருமை E இல்லாத போது தான் தெரிந்தது. என் அலுவலகக் கணிப்பொறியின் கீபோர்டில், E என்ற எழுத்து மட்டும் ஒரு பதினைந்து நாட்களாக வேலை செய்யவில்லை. அதனால், E அடிக்க முடியாமல் நான் ஈ அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் E பற்றி அறிந்து கொண்டேன்.
கடைசியாக என் கீபோர்டை மாற்றிவிட்டார்கள். அலுவலகத்தில் இப்போது நிம்மதியாக E அடித்துக் கொண்டிருக்கிறேன்.
முனு என் நண்பர் ஒருவரின் வீட்டு கணிணியில் U அடிக்க முடியாது, அந்த எழுத்தை ஓர் நோட்பேட் ஃபைலில் இருந்து தேவையானபோது கட் பேஸ்ட் செய்துகொள்வார்.
மற்றபடி ஆர்குட்டில் ஃபேன் ஆக போட்டதற்கு நன்றி.
நன்றி சாரங்கன்.
கிஷோர், நான் ஆஃபீஸில் 15 நாள் அப்படித்தான் செய்துகொண்டிருந்தேன். இப்போது தான் மாற்றினார்கள். அப்போதே எழுத நினைத்து இப்போது எழுதினேன். ஹிஹி…
dey ! ella E adikara vithaya pathi sonna sari ! aana officela worke illama
E adichitirukiye atthha sonniyaaa ????..
but the other E’s are better than office E’s . .
i liked it . . Mindla vachikiren !!
First Ever Indian Language Electronic Datasheet Website
Fourth In Asia
TAMIL DATASHEETS
தமிழ் தரவுத்தாள் தளம்
http://www.tamildata.co.cc
தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்
November 12, 2006 at 6:42 pm
நல்லா சொல்லியிருக்கறீங்கள் “ஈ” ன்ரை ஆருமையை..