Amusingly Simple

புத்தாண்டில் புதுத்தொடக்கம்

Posted by: Deepak Venkatesan on: January 1, 2007

எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள் தேர்வு செய்தோம். நண்பர்கள் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீராம், விக்ரம் உள்ளிட்ட பலரும் சேர்ந்து, குழிகள் தோண்டி மரங்களை நட்டோம். மரங்களுக்குப் பாதுகாப்பாக எளிய முறையில், பொருட்செலவு இல்லாமல் வேலி அமைக்கும் திட்டத்தை நண்பர்கள் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் கடைகளில் இருந்து பழைய டயர்களை வாங்கிவந்து, அவற்றை உள்வெளியாகத் திருப்பிவிட்டால், பட்டையாக இருக்கும். நடுகிற மரத்தைச் சுற்றி மூன்று கொம்புகள் நட்டு அவற்றில் இந்த டயர்களைக் கட்டிவிடுகிறார்கள். இதனால், ஆடு மாடுகளிலிருந்து இந்த மரங்கள் எளிதில் காப்பாற்றப்படுகின்றன. நமக்கும் பொருட்செலவு இல்லை.எங்கெல்லாம் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரிக்க ஒத்துக்கொள்கிறார்களோ, அங்கெல்லாம் மட்டுமே மரங்களை நட்டோம். முதல் மாதம் அந்தக் கடைக்காரர்கள் நீர்விட்டுப் பராமரித்தால், பின்னர், வாரம் இருமுறை மரங்களுக்கு நீர் பாய்ச்ச ஆளமர்த்தும் திட்டமும் உள்ளது. படிப்படியாக வாரந்தோறும் மரங்கள் நட்டு, வேளச்சேரி 100 அடி சாலை முழுவதையும் கவர் செய்வதென முடிவு செய்துள்ளோம்.
இதற்கு முன்னால், தியா சார்பில், ‘நிழல்’ என்ற அமைப்பின் உதவியுடன் வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தியா சார்பில் பல நல்ல சமூக திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். 2007-இல் இன்னும் பல விஷயங்கள் ஈடேறும் என்றும் எதிர்பார்க்கலாம். தியா மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும். http://diya.org.in

பசுமையுடன் தொடங்கிய 2007, பசுமையான விஷயங்களோடு செழிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

1 Response to "புத்தாண்டில் புதுத்தொடக்கம்"

[...] தீபக் எழுதுகிறார்… எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள் தேர்வு செய்தோம். [...]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

Please log in to WordPress.com to post a comment to your blog.

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Deepak Venkatesan