Amusingly Simple

Archive for the ‘அனுபவம்’ Category

பறவைகள் பலவிதம்

Posted by: Deepak Venkatesan on: May 8, 2009

பெங்களூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் இருக்கும் அழகான நகரம் மைசூரு. மைசூருக்கு 10 கி.மீ முன்பு வலது புறமாகச் செல்லும் சிறிய சாலையில் இறங்கி, ஒரு 5 கி.மீ அளவுக்குச் சென்றால் கிடைக்கிற இயற்கையின் அற்புதமான படைப்பு தான் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிய உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் விதவிதமான வண்ணமிகு பறவைகளைக் காண சரியான இடம் தான் ரங்கனதிட்டு. நானும் எனது நண்பர்கள் கார்த்திகேயன், சுப்ரமணியன் [...]

ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக [...]

மார்கழியில் மாக்கோலங்கள்

Posted by: Deepak Venkatesan on: January 11, 2007

என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா – பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் [...]

எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள் தேர்வு செய்தோம். [...]

இப்போது தான் ஈ அடிக்கிறேன்

Posted by: Deepak Venkatesan on: November 12, 2006

ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து – ‘E’ தான். ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பது போல், ‘E’ இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி. E – ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, [...]


Deepak Venkatesan