Amusingly Simple

Archive for the ‘அனுபவம்’ Category

சென்னை மழைச் சுற்றுலா

Posted by: Deepak Venkatesan on: October 28, 2006

சென்னையில் அழகான மழை! மழை என்றாலே சென்னை மிகவும் சுவாரஸ்யமாகி விடுகிறது. தெருவெல்லாம் கண்ணாடிகளாகி விடுகின்றன. கொஞ்சமாக பைக் சறுக்குகிறது. எல்லோரும் நத்தைகள் போல நின்று நின்று கவனமாக சாலைகளில் செல்கிறார்கள். குடைகள் இல்லாதவர்கள் தெருவில் ஓட்டம் பிடிக்கிறார்கள். தொப்பலாக நனைந்தும், வீரமாக வண்டியோட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். கார்களில் விருட்டெனப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள், இப்போது கார்களைச் செலுத்திக்கொண்டு, முன்னால் அதீத ஜாக்கிரதையுடன் செல்கிற சைக்கிள்காரனைப் பின்தொடர்ந்து, மெதுவாக மெதுவாக பவனிவருகிறார்கள். ஆட்டோக்கள் ‘நானே ராஜா’ என்று பாகுபாடில்லாமல் எல்லோர் [...]

நடைபோட்ட நாட்கள்

Posted by: Deepak Venkatesan on: October 17, 2006

நிலப்பரப்பின் அடியில் எப்போதாவது அழுத்தம் அதிகமாகும் போது, பூமி லேசாகச் சிலிர்த்துக் கொள்வதுண்டு. அது பூகம்பமாக வெடித்து நம்மை ஒரு கை பார்த்துவிடுகிறது. அப்படி – எப்போதாவது சிலிர்த்துக் கொள்ளும் பூமி போல, எப்போதாவது சமயமும் சமாச்சாரமும் கிடைக்கிற போது தான் எழுதுவேன் போலும்… இருந்தாலும் இத்தனை நாளும் நான் எழுதுவதை நாலு பேருக்குச் சொல்லிக் கொள்ள உதவிய தமிழ்மணத்திற்கு என் நன்றிகள். எங்கிருந்தோ தள்ளிவிடப்பட்டு இங்கு வந்து விழுந்திருக்கிற (பாவம்) உங்களுக்கும் என் நன்றிகள். இனி [...]

‘ஏவிசினியா மெரினா’ என்று அந்தப் படகோட்டி, மேங்குரோவ் மரங்களின் அறிவியல் பெயரைக் கூறிய போது, நான் ஒரு கணம் வாயடைத்துப் போனேன் – நானே பள்ளியில் படித்து மறந்து போன இப்பெயரை படிப்பறிவில்லாத இவர் இவ்வளவு அழகாகச் சொல்கிறாரே என்று. பின்னர் தான் தெரிந்தது, இப்பெயரை அங்குள்ள படகோட்டிகள் யாவரும் சொல்வார்கள் என்று. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதி, கோடை வெயிலைத் தணிக்கும் ஒரு இனிய மாலைப் பொழுது அனுபவமாகவே அமைந்தது.  சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் [...]

எல்லோருக்கும் நேராக வைத்த மையை எனக்கு மட்டும் கோணலாக வைத்து விட்டார்களே என்று தேர்தல் மைய அதிகாரி மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. அதிலும் என் என் நடுவிரலில் வேறு சிறு சிந்தல். அப்புறம், என் அலுவலக நண்பரின் விரலைப் பார்த்த பின்பு தான் எனக்கு ஆறுதல். அவர் கை முழுவதும் ஒரு மினி கோலமே போட்டுவிட்டிருந்தார்கள் தேர்தல் மைய அதிகாரிகள். முதல் முதலாக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ­– ஏதோ இந்தியாவிற்கே ஜனாதிபதி ஆகிவிட்டது [...]

சில ஞாபகங்கள்

Posted by: Deepak Venkatesan on: May 31, 2005

பின்புறத்தில் சற்றே பெருத்து, கிக் ஸ்டார்ட் செய்யப்படும் ஒரு மாதிரியான ஆட்டோக்களை என் சொந்த ஊரில் தான் பார்த்திருக்கிறேன். கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம், பெயர் 'கொப்பா'. Michael Crichton-னின் State of Fear-இல் எவ்வளவு தான் இயற்கையைத் திட்டி, கன்னாபின்னாவென்று விமர்சித்திருந்தாலும், நாலாபுறமும் மலைகள் மலைகள் என்று இருக்கிற ஊரைப் பார்க்கும் போது, மனம் அதில் லயித்து விடுவதில் ஆச்சரியமில்லை. முணுமுணுப்பது போல் வேகமாகப் பேசுகிற மைசூர் கன்னடம், மணிரத்தினம் பட [...]


Deepak Venkatesan