Amusingly Simple

Archive for the ‘சிறுகதைகள்’ Category

ஒரு குட்டிக் கதை

Posted by: Deepak Venkatesan on: January 13, 2010

இணையத்தில் வளைத்தது… அவனுக்குப் பிறவியிலேயே வலது கை கிடையாது. அவனுக்கு ஒன்பது வயது நிரம்பியபோது, ‘கராத்தே’ கற்றுக்கொள்ள விரும்பினான். பெற்றோரிடம் தன் Karate விருப்பத்தைச் சொன்னான். மகனின் துணிவைக் கண்டு மகிழ்ந்த பெற்றோர், அவனை கராத்தே பள்ளிக்கு அனுப்பினர். சில நாட்களிலேயே நன்றாகக் கராத்தே பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினான். கராத்தே போட்டி ஒன்றில் பங்குபெற விரும்பி, தன் ஆசிரியரிடம் இது தன்னால் முடியுமா என்று கேட்டான். “என் மீது முழு நம்பிக்கை வைத்து, நான் சொல்வதை அப்படியே [...]

அவந்திகா

Posted by: Deepak Venkatesan on: June 24, 2005

நீங்கள் அவந்திகா மாதிரிப் பெண்ணை எங்கும் பார்த்திருப்பீர்கள். பறக்கும் ரயிலின் சன்னலோரத்தில் செல்ஃபோனில் குசுகுசுக்கும் போது, தோளில் ஹேண்ட்பேக்கோடு பேருந்து நிறுத்தத்தில் வாட்சைத் திரும்பத் திரும்ப நோக்கு(லுக்கு) விடும் போது, சத்யம் தியேட்டர் வாசலில் நண்பர்கள் கூட்டத்து அரட்டையில் ஐக்கியமாகிப் போயிருக்கும் போது, வால் பிடித்துச் செல்லும் சென்னை ட்ராஃபிக்கில் ஸ்கூட்டியை செலுத்தும் சாகசத்தின் போது, இன்னும் பல இடங்களில், இன்னும் பல சந்தர்பங்களில்… இப்போது நீங்கள் அவந்திகாவைப் பார்க்க வேண்டியது, கடைசியாகச் சொன்ன ஸ்கூட்டி பயணத்தில். [...]

புதிரல்ல… புதிர்! (சிறுகதை)

Posted by: Deepak Venkatesan on: May 13, 2005

ஆங்கில எழுத்தாளர் Oscar Wilde எழுதிய சிறுகதையான "The Sphinx without a Secret" என்பதைத் தழுவி இந்தச் சிறுகதையை எழுதியுள்ளேன். கதையை அப்படியே மொழிபெயர்க்காமல், நமது சூழல்களுக்கு ஏற்ற விதத்தில் தமிழ்ப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பட்டதால், கதையை remake செய்தேன் எனலாம். இருப்பினும், கதைக் கரு, ஆஸ்கர் வைல்டினுடையது தான். * * * * * அன்று மாலை, திநகர் கண்ணதாசன் சிலைக்கு எதிரே உள்ள தெருவில் நான் தைக்கக் கொடுத்த செருப்பை [...]

மீண்டும் ஒரு சிறுகதை

Posted by: Deepak Venkatesan on: April 23, 2005

மீண்டும் ஒரு கதையை மொழிபெயர்க்கும் முயற்சி. Mike Krath எழுதிய A Most Ambitious Experiment என்கிற சிறுகதை. இந்த முறை கொஞ்சம் மாற்றி, கதைமாந்தரையும் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். பிழையிருப்பின் மன்னிக்கவும். விளையாட்டு "கண்மணி, நான் சொல்றதை கவனமா கேட்டுக்க", என்று மதன் சொன்ன போதே தன் கணவன் எக்குத்தப்பாக ஏதோ செய்யப் போகிறான் என்பது புரிந்துவிட்டது கண்மணிக்கு. "ம்ம்ம்… உனக்கு எப்படி சொல்லிப் புரிய வெக்றது? இப்ப நான் ரொம்ப தூரத்துக்கு ஒரு பயணம் போகப் போறேன். [...]

ஒரு சிறுகதை

Posted by: Deepak Venkatesan on: April 12, 2005

முதலில் ஒரு சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்று தோன்றியதால், இக்கதையை எழுதியிருக்கிறேன். ஆங்கில மூலம்: Fernando Sorrentino எழுதிய There's a Man in the Habit of Hitting Me on the Head with an Umbrella என்கிற சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி செய்துள்ளேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். எப்போதும் ஒருவன் என் தலையில் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான் ஒரு மனிதன் எப்போதும் என் தலையில் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான். அதனை [...]


Deepak Venkatesan