Amusingly Simple » சிறுகதைகள்

ஒரு குட்டிக் கதை
இணையத்தில் வளைத்தது…

அவனுக்குப் பிறவியிலேயே வலது கை கிடையாது. அவனுக்கு ஒன்பது வயது நிரம்பியபோது, ‘கராத்தே’ கற்றுக்கொள்ள விரும்பினான். பெற்றோரிடம் தன்

Karate

விருப்பத்தைச் சொன்னான். மகனின் துணிவைக் கண்டு மகிழ்ந்த பெற்றோர், அவனை கராத்தே பள்ளிக்கு அனுப்பினர். சில நாட்களிலேயே நன்றாகக் கராத்தே பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினான். கராத்தே போட்டி ஒன்றில் பங்குபெற விரும்பி, தன் ஆசிரியரிடம் இது தன்னால் முடியுமா என்று கேட்டான். “என் மீது முழு நம்பிக்கை வைத்து, நான் சொல்வதை அப்படியே செய்வதானால், உன்னால் முடியும்” என்றார் ஆசிரியர். அவனும் சம்மதித்தான்.

ஆசிரியர் அவனுக்கு ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டுமே கற்றுக்கொடுத்தார். அந்த தாக்குதலில் மட்டும் அவன் நன்றாகக் கவனம் செலுத்திப் பயின்றான். ஆனாலும் அவனுக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது. எல்லோரும் பலவிதமான தாக்குதல் முறைகளையும், தற்காப்பு முறைகளையும் நன்றாகப் பயின்றுகொண்டிருக்கும் போது, அவன் மட்டும் ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டும் கற்றுக்கொள்வது, அவனுக்குச் சற்று நெருடலாக இருந்தது. ஆசிரியரிடம், தனக்கு மேலும் சில தாக்குதல் முறைகளையும் கற்றுத் தரும்படி கேட்டான். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அந்த ஒரு முறையை மட்டும் நன்றாகப் பயிலுமாறு கூறினார்.

கராத்தே போட்டியின் முதல் சுற்றில் அவன் வெற்றி பெற்றான். அடுத்த சுற்றிலும் வெற்றி பெற்றான். அடுத்தடுத்த சுற்றுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று கடைசியில் போட்டியிலேயே முதல் இடம் பிடிக்கும் அளவிற்கு வந்து விட்டான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி இது சாத்தியமானது? ஒரே ஒரு கை இரூக்கும் ஒருவன் எப்படி மற்றவர்களோடு போட்டியிட்டு ஒரு கராத்தே போட்டி முழுவதையும் வெல்ல முடியும் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆசிரியரிடம் கேட்டான். ஆசிரியர் சிரித்தார். “நான் உனக்குக் கற்றுக்கொடுத்த தாக்குதல் முறை என்னவோ ஒன்றுதான். ஆனால், அந்தத் தாக்குதலில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள ஒரே ஒரு வழி மட்டும் தான் உள்ளது. அது என்னவென்றால், தாக்குபவரின் வலது கையைப் பிடித்து இழுத்துப் போட வேண்டும்!” என்றார்.

iNaiyaththil vaLaiththathu…

avanukkup piRaviyileeyee valathu kai kidaiyaathu. avanukku onpathu vayathu wirampiyapoothu, karaaththee kaRRukkoLLa virumpinaan. peRRooridam than viruppaththais sonnaan. makanin thuNivaik kaNdu pakizntha peRRoor, avanai karaththee paLLikku anuppinar. sila waadkaLileeyee wanRaakak karaaththee payiRsiyil iidupadath thodangkinaan. karaaththee pooddi onRil pangkupeRa virumpi, than aasiriyaridam ithu thannaal mudiyumaa enRu keeddaan. “en miithu muzu wampikkai vaiththu, naan solvathai appadiyee seyvathaanaal, unnaal mudiyum” enRaar aasiriyar.

aasiriyar avanukku oree oru thaakkuthal muRaiyai maddumee kaRRukkoduththaar. antha thaakkuthalil maddum avan wanRaakak kavanam seluththip payinRaan. aanaalum avanukkuk konjsam kavalaiyaaka irunthathu. elloorum palavithamaana thaakkuthal muRaikaLaiyum, thaRkaappu muRaikaLaiyum wanRaakap payinRukoNdirukkum poothu, avan maddum oree oru thaakkuthal muRaiyai maddum kaRRukkoLvathu, avanukkus saRRu werudalaaka irunthathu. aasiriyaridam, thanakku meelum sila thaakkuthal muRaikaLaiyum kaRRuth tharumpadi keeddaan. aanaal, avar maRuththuviddaar. antha oru muRaiyai maddum wanRaakap payilumaaRu kuuRinaar.

karaaththee pooddiyin muthal suRRil avan veRRi peRRaan. aduththa suRRilum veRRi peRRaan. aduththaduththa suRRukaLilum thodarnthu veRRi peRRu kadaisiyil pooddiyileeyee muthal idam pidikkum aLaviRku vanthu viddaan. avanukku onRumee puriyavillai. eppadi ithu saaththiyamaanathu? oree oru kai iruukkum oruvan eppadi maRRavarkaLoodu pooddiyiddu oru karaaththee pooddi muzuvathaiyum vella mudiyum enRu avanukkuk kuzappamaaka irunthathu. aasiriyaridam keeddaan. aasiriyar siriththaar. “waan unakkuk kaRRukkoduththa thaakkuthal muRai ennavoo onRuthaan. aanaal, anthath thaakkuthalil irunthu thammaith thaRkaaththuk koLLa oree oru vazi maddum thaan uLLathu. athu ennavenRaal, thaakkupavarin valathu kaiyaip pidiththu izuththup pooda veeNdum!” enRaar.

அவந்திகா
நீங்கள் அவந்திகா மாதிரிப் பெண்ணை எங்கும் பார்த்திருப்பீர்கள். பறக்கும் ரயிலின் சன்னலோரத்தில் செல்ஃபோனில் குசுகுசுக்கும் போது, தோளில் ஹேண்ட்பேக்கோடு பேருந்து நிறுத்தத்தில் வாட்சைத் திரும்பத் திரும்ப நோக்கு(லுக்கு) விடும் போது, சத்யம் தியேட்டர் வாசலில் நண்பர்கள் கூட்டத்து அரட்டையில் ஐக்கியமாகிப் போயிருக்கும் போது, வால் பிடித்துச் செல்லும் சென்னை ட்ராஃபிக்கில் ஸ்கூட்டியை செலுத்தும் சாகசத்தின் போது, இன்னும் பல இடங்களில், இன்னும் பல சந்தர்பங்களில்… இப்போது நீங்கள் அவந்திகாவைப் பார்க்க வேண்டியது, கடைசியாகச் சொன்ன ஸ்கூட்டி பயணத்தில். வெள்ளையில் பூப்போட்ட சுடிதார், பச்சை நிற துப்பட்டா, தோளில் ஹேண்ட்பேக், அதற்குள் ஒரு சிறிய பர்ஸ், அதற்குள் ஒரு சின்ன என்னவோ-வில் செல்ஃபோன். அனைத்தும் ஸ்கூட்டி ஸீட்டில், ஸ்கூட்டி சாந்தோம் சாலையில்!  சாந்தோமில் இருக்கும் தன் வீட்டிலிருந்து கிளம்பி, க்ரீன்வேஸ் சாலை வழியாக திருவான்மியூருக்குப் பயணம். பீக் ட்ராஃபிக்கின் நடு சென்டரில் மாட்டித் தவிக்கும் மோட்டார் பைக் அந்நியன்களின் பெருமூச்சுகளுக்கும் ஏக்கப் பார்வைக்கும் நடுவில், லேட்டாக வந்தாலும், அவந்திகா, மஞ்சள் கோட்டைத் தாண்டி, சிக்னலுக்காகக் காத்திருப்போர் பட்டியலை மதியாமல் முன்னே நிற்கும் வாகன அணிவகுப்பின் முகப்பிற்குச் செல்ல, சரியாக சிக்னல் பச்சை! விருட்டென்று ஸ்கூட்டியின் காதைத் திருக, ஸ்கூட்டி எல்லோரையும் முந்தி வேகமெடுக்கிறது. சென்னை சூரியனின் மிராஜ்களைத் துளைத்துப் பாய்கிறது.  சென்னைதான் எவ்வளவு மாறிவிட்டது. எல்லா நாட்களிலும், எல்லா சாலைகளிலும், ட்ராஃபிக்! ட்ராஃபிக்! ட்ராஃபிக்! நிரம்பி வழியும் பச்சைப் பேருந்துகள் – மினி இந்தியாக்கள்! "யாகாவா ராயினும்…." என்று வெள்ளைத் தகட்டில் அடித்து வைத்திருக்கும் MTC குறளின் கண் முன்னே சென்னைவாசிகளின் தற்கால வரலாறு முழுதும் கடைவிரிப்பு. மாமா ஓரகடத்தில் பிளாட் வாங்கியதிலிருந்து, பிரகாஷ் நளினியை சைட் அடித்தது வரை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள MTC-கள் உபயம். செவிக்குணவில்லாத போது விழிக்கு உணவு போடும் சுவரொட்டிகள். குமுதம் குமுதம் குமுதம் குமுதம் நக்கீரன் நக்கீரன் நக்கீரன் கல்கி கல்கி கல்கி என்று வரிசையாக. எல்லாவற்றிலும் சிரிக்கும் சோனியாகள், தியாக்கள், சில சமயம் ஆதிகேசவன்கள். எல்லா ஆரவாரத்துக்கும் மௌன சாட்சியாக நிற்கும் பிரம்மாண்ட ஹோர்டிங்குகள். அவற்றைக் கட்டி மேய்க்கிற மாதிரி மேலே இருந்து சிரிக்கும் தகிக்கும் சூரியன். இவை எல்லாவற்றையும் புறக்கணித்து, தன் ஸ்கூட்டியில் பறக்கிற அவந்திகா!  திருவிக பாலத்தில் போகும் போதே அடையாறு ஃப்ளைஓவரில் ஸ்கூட்டியில் பறப்பதைக் கற்பனையில் ஓட விடுகிறாள். எதிலும் ஃபாஸ்ட்! சலனமின்றி கடலைத் தொடும் அடையாறு அவள் கண்களின் கவனத்தைக் கவர்ந்தது அரை நொடிதான். பின் மீண்டும் சாலை. ஃப்ளைஓவரில் ஏறி, அங்கு எல்லா சமயமும் தனக்கே உரியதாய் சாலையின் நடுவில் 1985 ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருக்கிற வழுக்கை விழுந்த ரிடையர்ட் க்ளார்க்கை ஓவர் டேக் செய்வது எப்படி என்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டே ஃப்ளைஓவரை நெருங்க, முன்னாலேயே சட்டென்று இடது பக்கம் திரும்பி விடுகிறாள். அங்கே நிற்பது ப்ரீத். "ஹாய் ப்ரீத்!" ஸ்கூட்டி நின்று விடுகிறது.  "ஹேய் அவந்தி! எங்கே?"  "சும்மா தான். நம்ம ஷாலு இல்ல, அவளுக்கு நெக்ஸ்ட் மந்த் மேரேஜ். கொஞ்சம் ஏர்லி தான். US மாப்ளெ. டெலிஃபோன் பண்ணா. அதான் சும்மா போய் பார்க்கலாம்னு… நீயும் வாயேன் ப்ரீத்?"  "எனக்கு சொஞ்சம் வேலை இருக்கு. விசா இன்டர்வ்யூக்கு ரெடி பண்ணனும். பெஸன்ட் நகர்ல எங்க அங்கிளைப் பார்க்கணும்&

quot

;  "ஏறிக்கோயேன். உன்னை ட்ராப் பண்றேன்"  "இல்லை பரவாயில்ல. உனக்கு தான் சுத்து"  "ஆமாம். இவனை ட்ராப் பண்றதுனால அம்பானி கூட எனக்கு அப்பாயிண்ட்மென்ட்க்கு லேட் ஆகுது பாரு… சும்மா ஏறுடா"  ஸ்கூட்டி இருவரையும் சுமந்து கொள்கிறது. ஃப்ளைஓவர் எதிர்பார்ப்புகளை மறந்து, அதன் அடியில் சாலையில் சென்று, மறுபடியும் சிக்னல்!  ஒரு வழியாக பெஸன்ட் நகரில் ப்ரீத்தை உதிர்த்து விட்டு, ஷாலுவின் வீட்டை நோக்கி ஸ்கூட்டியைச் செலுத்துகிறாள். எம் ஜி ரோடில் ட்ராஃபிக் சற்று அதிகமாகவே இருக்கிறது. ரெஸ்டாரண்டுகளில் எல்லாம் ஒட்டி உட்கார்ந்த இரட்டை உருவங்கள் சன்னமாக ஏதோ பேசிக்கொண்டுள்ளன. ஃபுட் ஜாயிண்ட் எதிரில் வண்டியில் வெள்ளரிக்காய் விற்பவன் ரோட்டில் உலாப் போகிற யுவதிகளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே "வெள்ளரீ… வெள்ளரீ…" தெருவோரப் பெட்டிக்கடையில் வேளாங்கன்னி மாதா பொம்மைகள். பேக்கரியில் பஃப்ஸ் சாப்பிடும் ஸ்கூல் பையன்கள். ரோட்டைக் கடக்கும் முதியவர். இதோ… அவந்தியை ஓவர்டேக் செய்கிற அந்த யமஹாவில் இரண்டுபேர்… அய்யோ, அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஓ மை காட்! சட்டென்று அவந்தியின் உடம்பெல்லாம் அட்ரினாலின். கழுத்தில் ஒரு சிராய்ப்பு. "ஹேய் ஹேய் என்னோட செயின்…. செயின்…. திருடன்! திருடன்!!"  அவந்தியின் அலறல் கேட்டு அக்கம்பக்கம் இருப்போர் சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார்கள். அவந்தி ஸ்கூட்டியை நிறுத்திவிடுகிறாள். அந்த யமஹா திருடர்கள் அதோ… இருபதடி தூரத்தில். வாகனக் கூட்டங்களை விலக்கிச் செல்ல எவ்வளவு பிரயத்னம் அவர்கள் செய்கிறார்கள். ஹாங்க்! ஹாங்க்! ஓயாமல் ஹாரன்கள். MTC-யில் பிரசங்கங்கள் நிறுத்தப்பட்டு, எல்லா தலைகளும் ஜன்னலுக்கு வெளியே. அவந்தி என்ன செய்யப்போகிறாள்? யாரேனும் ஏதேனும் செய்கிறார்களா? இன்னும் இன்னும் வெற்றுப் பார்வைகள். முன்னேறும் யமஹா…. ஸம்படி டூ ஸம்திங்!  சாலையைக் கடந்த முதியவரைத் தொடர்ந்து ஒரு பள்ளிப் பிள்ளைகள் கூட்டம். சாலை மூன்று வினாடிகளில் ப்ளாக்ட். ட்ராஃபிக்! அதோ ட்ராஃபிக்கில் அந்த யமஹா. அவர்களுக்கு சந்து கிடைக்கவில்லை. இருபதடியில் நிற்கிறார்கள். திடீரென்று தோன்றுகிறது அவந்திக்கு. ஸ்கூட்டியின் காதைப் பலமுள்ளமட்டும் திருகுகிறாள். ஸ்க்கூட்டி விருட்டெனப் பாய, கால் நொடிக்கு அவளை நிறுத்திப்பிடித்த இனர்ஷியா விலகிட, அவளும் பறக்கிறாள். அவந்தி… இன்னும் வேகமாக! பதினைந்து அடி… பன்னிரண்டு… பத்து… ஏழு… ரெண்டு… சடார்! அவந்தியின் ஸ்கூட்டி இடிக்கிற இடியில் யமஹா கொஞ்சம் பேலன்ஸ் மிஸ். அதற்குள் க்ளியராகிவிடுகிறது ட்ராஃபிக்… கிடைத்த சந்தில் பாய நினைக்கும் யமஹா… ஸ்கிரீரீரீரீரீச்ச்ச்ச்ச்!!!! ஸ்கிட் ஆகி சாலையோரத்திற்கு சரிகிறது.  இதற்குள் தைரியம் வந்த சில பொதுஜனங்களின் கையில் அந்த யமஹா ஆசாமிகளின் காலர். அவர்களின் முதுகில் தர்ம அடி! தன் ஸ்கூட்டியைப் புறக்கணித்து ஜனத்திரளை நோக்கி ஓடுகிறாள் அவந்தி. "யூ ப்ரூட்ஸ்! செயினைத் திருடினா சும்மா விட்டுடுவேன்னு நினைச்சீங்களா? ராஸ்கல்ஸ்!" தன் ஹீல்ஸ் காலால் அவர்களை நாலு மிதி மிதிக்கிறாள். அதோ அவன் கையில் அவந்தியின் செயின். "டேய் நாதாரி பாப்பாவோட செயினைத் தாடா சோமாரி! இந்தாக் கண்ணு. இவனுங்களையெல்லாம்…"  தன் செயின் கிடைத்து விடுகிறது அவந்திக்கு. தன் செயின்! அப்பா அவளுக்கு ஆசையோடு வாங்கிக் கொடுத்தது. தேங்க் காட்! ஒரு நிமிஷம் கலங்கியே போய்விட்டாள். என்ன வேகம்! என்ன பாய்ச்சல்! என்ன தைரியம் அவனுக்கு… அவளுக்கு. இந்த மாதிரியெல்லாம் கூட சென்னையில் நடக்கிறதா என்ன? இவனை…. ரிலக்ஸ்! ரிலாக்ஸ்!  அதற்குள் அங்கு வருகிற கான்ஸ்டேபிள் கையில் அந்த யமஹா திருடர்கள். ஜனத்திரளின் ஊடே நகர்ந்து ஸ்கூட்டியை அட

ைகிறாள் அவந்திகா. சே! ஸ்கூட்டி முன் பகுதியில் ஒரு சொட்டை விழுந்திருக்கிறது. ஆனால் செயின் கிடைத்து விட்டதே. அது போதும். செயினை விட்டிருந்தால் ஸ்கூட்டி பழுதாகி இருக்காதோ? ம்ஹூம்! அந்தத் திருடனுக்கு தண்டனை தேவைதான். என்ன தைரியம் இருந்தால் ஒரு பெண்ணின் செயினை நடு சாலையில் திருடுவான். அதுவும் அவந்தியின் செயினை! முட்டாள்கள்! இல்லை… கிராதகர்கள். அவள் செய்தது சரிதான். Prodigal son கதை ஏனோ அவள் நினைவுக்கு வருகிறது. தன் ஸ்கூட்டியை முன்னே செலுத்துகிறாள்.  "ஷாலூ! ஸாரிடா! நான் அப்றம் உன்னை சந்திக்கிறேன். ஒரு பெரிய மேட்டர். வீட்டுக்குப் போனப்றம் சொல்றேன்"  ஸ்கூட்டி வீட்டு வாசலில் நின்றதும் நிற்காததுமாய், உள்ளே டெலிஃபோன் அடிக்கிறது. அவந்திகா தன் சமீபகால சாகசங்களைத் தன் துள்ளலிலேயே விளம்பரப்படுத்துகிறாள். ஓடிச் சென்று, ரிஸீவரை எடுத்து, "ஹலோ."  "ஏய் அவந்தி, இன்னிக்கு ஈவ்னிங் நாங்கள்ளாம் பிக்சர் போறோம், நீயும் வரியா?"  "ஷ்யூர்! கண்டிப்பா வரேன். ஆமா… என்ன பிக்சர்?"  "மிரட்டல் அடி!"

புதிரல்ல… புதிர்! (சிறுகதை)
ஆங்கில எழுத்தாளர் Oscar Wilde எழுதிய சிறுகதையான "The Sphinx without a Secret" என்பதைத் தழுவி இந்தச் சிறுகதையை எழுதியுள்ளேன். கதையை அப்படியே மொழிபெயர்க்காமல், நமது சூழல்களுக்கு ஏற்ற விதத்தில் தமிழ்ப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பட்டதால், கதையை remake செய்தேன் எனலாம். இருப்பினும், கதைக் கரு, ஆஸ்கர் வைல்டினுடையது தான்.

அன்று மாலை, திநகர் கண்ணதாசன் சிலைக்கு எதிரே உள்ள தெருவில் நான் தைக்கக் கொடுத்த செருப்பை வாங்கப் போனேன். மண்டையைப் பிளக்கிற இந்த வெயிலிலிருந்து என்று தான் விடிவோ என்று பெருமூச்சு விட்டவனாய் திரும்பிய எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. எதிரில் கண்ணன் நின்றிருந்தான். கண்ணன் என்றால், என் குறைதீர்க்க வந்தப் பரந்தாமன் கண்ணன் இல்லை. இவன் என் பாலிய நண்பன். பள்ளி, கல்லூரி என்று தொடர்ந்து என் கூடவே படித்தவன். பத்து வருஷங்களுக்கு முன்னால் அவனைக் கல்லூரியில் பார்த்தது. "ஹாய்! வாட் எ சர்ப்ரைஸ்" என்று பளீர் புன்னகையோடு கைக்குலுக்கினேன். அவனும் கைக்குலுக்கிவிட்டு லேசாகச் சிரித்தான். சிரிப்பில் சுருதியில்லை. படபடவென்ற அவன் பேச்சும், கோல்கேட் சிரிப்பும் அவன் முகத்தில் எங்கேனும் மிச்சம் மீதி இருக்கிறதா என்று தேடினேன். ஊஹூம்.  "என்னடா டல்லா இருக்கே? ம்ம்ம்… உனக்கு கல்யாணமாயிடுச்சு, அதானே?" என்றேன், சற்று நக்கலாகவே…  "என்னால இந்தப் பெண்களை புரிஞ்சிக்கவே முடியலடா" என்றான்.  "கண்ணா, என்ன, புதுசா philosophy படிக்றியா? ஓகே ஓகே, யார் அந்த பொண்ணு?"  "இங்க ஒரே கூட்டமா இருக்கு… வேற எங்காவது போய் பேசலாமே"  அடுத்த நிமிடம், ஆட்டோவில் நுங்கம்பாக்கம் நோக்கிப் பயணமானோம். "எங்கடா போலாம்? நீயே சொல்லு" – இது நான். "எங்கயாவது அமைதியா இருந்தா சரி" – கண்ணன்.  நுங்கம்பாக்கம் ஹை ரோடில், 'பரிஸ்தா'வில் கூட்டம் அதிகமாக இல்லை. ஆர்டர் செய்த சான்விச்சை மெல்ல கொரித்துக் கொண்டே கேட்டேன், "இப்ப சொல்லுடா".  கண்ணன் கொஞ்சம் மௌனமாயிருந்தான். கண்களை மூடிக் கொண்டான். எதையோ யோசிப்பது போல இருந்தது. பிறகு, தன் கையில் வைத்திருந்த தோல்ப்பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து என்னிடம் கொடுத்தான். மெல்ல அதைத் திறந்து பார்த்தேன். ஒரு பெண்ணின் படம். மன்னிக்கவும்… ஒரு அழகான பெண்ணின் படம்!  'அழகான' என்று சொல்லும் போதே, எல்லாம் அதில் ஐக்கியம். பெரிய கரிய கண்கள், நேர்த்தியான மூக்கு, சிவந்த உதடுகள் – ஒரு முறை பார்த்தாலே காதல் பண்ணலாம் என்று தோன்றியது. போதாக்குறைக்கு, ஒரு மெல்லிய, மிகமெல்லிய புன்னகை – அவள் உதடுகளில்.  "இவளைப் பத்தி நீ என்ன நினைக்கிற? இவள் நம்பகமானவளா தெரியறாளா?"  பார்த்தவுடன் எதையும் சொல்லத் தோன்றவில்லை. எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம். அழகு என்றாலே ஆபத்து என்று யாரோ சொல்லியிருக்கிறார்களே… புன்னகை வேறு. இலக்கணப்படி பார்த்தால், அவளை நம்புவதும் கஷ்டமாகத்தான் இருந்தது… ஆனால்…  "உன்னை தாண்டா கேக்கறேன்… இவளைப் பத்தி என்ன நினைக்கறே சொல்லு"  "நீ கேக்றதே புதிராத்தான் இருக்கு. இவ கிட்ட இருக்கிற மோனாலிசா புன்னகை வேற… சரி, விஷயம் என்ன… புரியறா மாதிரி சொல்லு"  வெய்ட்டர் வந்து தண்ணீர் ஊற்றிச் செல்லும் வரை அமைதியாய் இருந்தான். அதன் பின்னால் இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினான். கதை உங்கள் பார்வைக்கு இதோ:    ஒரு நாள் காலை நான் ஆஃபீஸ் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், அடையாறு சிக்னலில் பச்சை விழுவதற்காக காத்திருந்தேன். டிஜிட்டலில் 85, 84, 83… என்று மிக மெதுவாக வினாடிகள் குறைந்து கொண்டிருந்ததால், சுற்று முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, பக

கத்தில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து இவள் வேகமாக வெளியில் வந்தாள். சடாரென்று ஒரு ஆட்டோவைப் பிடித்தாள். சிக்னல் பச்சைக்கு மாறிவிடவே, ஆட்டோ கடகடவென ஓடி மறைந்தது. அதோடு அவளும் மறைந்தாள். அவளைப் பார்த்த நிமிடமே அவளிடம் எனக்கு ஒரு வகை ஈர்ப்பு உண்டாகியது.  வீட்டுக்குப் போனேன். டிவி பார்த்தேன். அவள் நினைவுகள் மட்டும் அகலவேயில்லை. இரவெல்லாம் அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு அடுத்த நாள் அவள் அடையாறு சிக்னலில் தென்படுகிறாளா என்று தேடினேன். அதன் மறுநாளும் தேடினேன். அவள் காணக் கிடைக்கவேயில்லை. அப்புறம் அவளை மறந்து போனேன்.  அடுத்த வாரம் என் நண்பன் ஒருவன் சவேராவில் பார்ட்டி என்று வரச்சொல்லியிருந்தான். போனேன். பார்ட்டியில் பாட்டு டான்ஸ் என்று அமர்க்களமாக இருந்தது. திடீரென்று…. என்ன ஆச்சரியம்! அடையாறில் பார்த்த அவள், பார்ட்டியில்! நண்பன் அவளை எனக்கு அறிமுகம் செய்தான். "மிஸ் மேகா. மிஸ் மேகா, திஸ் இஸ் கண்ணன்". லேசாகப் புன்னகைத்தாள். அவளின் மோனாலிஸா புன்னகை. "மேகா, நான் உங்களை ஒரு வாரம் முன்னால அடையாறு சிக்னல்ல பார்த்தேன்". அவள் கொஞ்சம் ஷாக் அடித்தது போல அதிர்ந்தாள். பின்னர், மிக மெல்லிய குரலில், "சத்தமா பேசாதீங்க. யாராவது கேட்டுட போறாங்க" என்றாள். ஒரு அழகான பெண்ணிடம் பேசப் போய் இப்படி அசட்டுத்தனமாக ஆனது எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பிறகு, நிறைய பேசினோம். இல்லை இல்லை, பேசினேன். அவள் கொஞ்சமாக, அளந்து அளந்துப் பேசினாள். யாராவது கேட்டுவிடப் போகிறார்கள் என்ற அச்சத்துடன் பேசுவது போல இருந்தது. என்னவானாலும் சரி, இவளைக் காதல் பண்ணியே தீருவேன் என்று என் மனம் துள்ளியது. அவளைச் சுற்றியிருந்த அந்த மர்மம் கூட, அவள் மேலான மயக்கத்தை அதிகரிக்கத்தான் செய்தது. பார்ட்டி முடிந்து அவள் போகும் போது, "மேகா, நாம் மறுபடியும் எப்ப சந்திக்கலாம்?" என்றேன். அவள் சற்று தயங்கினாள். யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். "நாளை மாலை 5 மணிக்கு இங்கேயே சந்திக்கலாம்" என்றாள். வேகமாய் மறைந்து போனாள்.  அடுத்த நாள் 4.45 மணிக்கே சவேரா போனேன். "இப்பத்தான் கெளம்பிப் போனாங்க" என்றான் வாட்ச்மேன். எனக்கு பலத்த ஏமாற்றமாக இருந்தது. நண்பனுக்கு டெலிஃபோன் செய்து அவள் அட்ரஸை வாங்கினேன். 'மேகா, உன்னைப் பின்னால் எப்போது சந்திப்பது?' என்று கேட்டு அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை அவளுக்குப் போஸ்ட் செய்தேன். இரண்டு வாரமாகியும் பதில் வரவில்லை. பிறகு, மேகா கொடுக்கச் சொன்னதாக என் நண்பன் எனக்கு ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். பிரித்துப் படித்தேன். 'வரும் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருப்பேன், அப்போது சந்திக்கலாம்' என்று எழுதியிருந்தாள். அடியில், பின்குறிப்பு என்று போட்டு 'என் வீட்டிற்குக் கடிதம் எழுத வேண்டாம். விவரத்தை நேரில் சொல்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது.  ஞாயிறு அன்று அவளைச் சந்தித்தேன். மிக எதார்த்தமாகப் பழகினாள். அவள் மீதான என் காதல் அதிகமாவது போல் தோன்றியது. அன்று நான் கிளம்பும் முன் மிக ரகசியமாக என் அருகில் வந்து சொன்னாள்: "அடுத்த முறை எனக்கு கடிதம் போடறப்ப, திருமதி இந்திரா, ரீடர்ஸ் பாயிண்ட், காலேஜ் ரோடு அப்டீங்கற அட்ரஸ்க்கு எழுதுங்க. சில பர்சனல் காரணத்துக்காக என் வீட்டுக்கு லெட்டர் போடாதீங்க ப்ளீஸ்"  அதற்கப்புறம் அவளை நிறைய சந்தித்தேன். அவளின் மர்மமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தது. சில சமயம் அவள் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருக்கிறாளா என்று நினைத்தேன். இருக்க முடியாது. அவளே மிகவும் ரிஸர்வ் டைப் போலத் தோன்றினாள். அவளின் மர்மத்திற்கு மோனாலிஸாவே தேவலாம் போலத் தோன்றியது. இறுதியாக ஒரு நாள

் முடிவு செய்து விட்டேன். அவளை நான் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தேன். அவளிடம் இருந்த மர்மங்கள் என்னைத் தடுக்க முடியாது என்று உறுதியாயிருந்தேன். அவள் கொடுத்த முகவரிக்கு அன்று இரவே ஒரு கடிதம் எழுதினேன். 'என்னை திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு சந்திக்க முடியுமா?' என்று அக்கடிதத்தில் கேட்டிருந்தேன். 'சரி' என்று பதில் எழுதினாள். அன்று நான் தான் உலகத்திலேயே சந்தோஷமான ஆள் என்று தோன்றியது. அவளிடம் என்னமோ இருக்கிறது. அவளின் மர்மங்களைத் தாண்டியும் அவள்பால் ஈர்க்கப்படுவதாக எண்ணினேன். ஆனால் இப்போது யோசிக்கும் போது தோன்றுகிறது. நான் அவளை உண்மையாகவே காதலித்தேன். ஆனால், அவளது மர்மம்: அது மட்டும் என்னை வாட்டி எடுத்தது. ஏன் தான் இப்படி ஒரு போராட்டமோ… கடவுளே!  "அப்ப அவளோட மர்மத்த நீ கண்டுபிடிச்சுட்டியா?" கண்ணனின் கதையில் ஐக்கியமாகிப் போன நான் கேட்டேன்.  "அதை நீதான் சொல்லணும்" என்றான்.    திங்கள்கிழமை. நான் மேகாவிடம் என் காதலைப் ப்ரொபோஸ் செய்யப் போகிற நாள். அன்று காலை முதலே நெர்வஸாக இருந்தேன். ஆஃபீஸுக்கு லீவ் சொல்லிவிட்டேன். மயிலாப்பூரில் இருக்கிற என் மாமாவைப் போய்ப் பார்த்தேன். திரும்புகையில், ட்ராஃபிக் ஜாமாகி இருந்தது. ஒரு சின்ன, மிகச் சின்ன சந்தில் நுழைந்தேன். எதிரில் திடீரென்று மேகா தோன்றினாள். தெருமுனையில் சென்றுகொண்டிருந்தாள். அவள் என்னைக் கவனிக்கவில்லை. மிகவும் ஜாக்கிரதையாக, எப்போதும் போல, எல்லா புறமும் பார்த்து, அந்தத் தெருக்கோடியில் இருந்த வீட்டினுள் நுழைந்தாள். "ஆஹா, இதுதான் உன் மர்மமா?" என்று என்னிடமே சொல்லிக்கொண்டேன். நேரே அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். ஏதோ தங்கும் விடுதி போல இருந்தது. கீழே பார்த்தேன். அவசரத்தில் அவள் தன் கைக்குட்டையை நழுவ விட்டதைக் கவனிக்காமல் உள்ளே போயிருந்தாள். அதை எடுத்து என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ஒரு நிமிடம் என்ன செய்வது என்று யோசித்தேன். சரி, அவளின் பர்ஸனல் விஷயத்தில் மூக்கை நுழைப்பானேன்… அவளிடம் நேராகவே கேட்டு விடலாம் என்று தீர்மானித்து அங்கிருந்து நகர்ந்தேன்.  மாலை 6 மணிக்கு அவள் வீட்டிற்குப் போனேன். சோஃபாவில் சாய்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஒற்றைச் சரடு முத்துமாலை மங்கலான ஒளியில் மின்னியது. அவள் தேவதையாகத் தெரிந்தாள். "வாங்க கண்ணன், காலைலேர்ந்து எங்கயும் போகாம வீட்லியே இருந்தேன். ரொம்ப போரடிக்குது" என்றாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். மௌனமாய் அவளைப் பார்த்தேன். என் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து அவள் முன் வைத்தேன். "மேகா, இத நீ இனிக்கு காலையில மயிலாப்பூர்ல தவற விட்டுட்ட" என்றேன். அவள் ஷாக் அடித்து என்னைப் பார்த்தாள். அந்த கைக்குட்டை மேடை மேலேயே கிடந்தது. "அங்க நீ எதுக்கு போன?" என்றேன்.  "அதை கேக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?"  "உன் கணவனாகப் போற உரிமை. நீ என்னை கலியாணம் பண்ணிக்றியானு கேக்கத் தான் வந்தேன்"  அடுத்த வினாடி அவள் கண்களில் கண்ணீர். முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.  "நீ என்கிட்ட சொல்லியே ஆகணும்"  அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். என்னை நேரே பார்த்தாள். "மிஸ்டர் கண்ணன், உங்க கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்ல" என்றாள்.  "நீ யாரையோ பார்க்கப் போயிருக்க. இது தான் இத்தனை நாளா நான் உன்னப்பத்தி தேடிட்டிருந்த மர்மம்"  அவள் கன்னம் சிவப்பானது. "நான் யாரையும் பார்க்கப் போகலை"  "நீ உண்மையே பேச மாட்டியா?"  "உண்மை என்னன்னு சொல்லிட்டேன்"  என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவளை என்னென்னவோ சொல்லித் திட்டினேன். வேகமாக அங்கிருந்து என் வீட்டிற்கு வந்துவிட்டேன்.  அடுத்த நாள் அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதனை

் பிரித்துப் பார்க்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டேன். வேலை நிமித்தமாக பெங்களூர் போய் விட்டேன். ஒரு மாதம் கழித்துத் திரும்பினேன். நேரே மேகாவைப் பார்க்கப் போனேன். அவள் இறந்து போயிருந்தாள். திடீரென்று குளிர் ஜுரம் ஏற்பட்டு, நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்து போனதாகச் சொன்னார்கள். நான் பைத்தியமாகிப் போனேன். உலகமே வெறுத்துப் போனது. அவளை அப்படி நேசித்தேனே… எல்லாம் கனவாகிப் போனதே என்று வருந்தினேன். கடவுளே, எல்லாவற்றையும் பிடுங்கி விட்டாயே என்று அழுதேன்.    "டேய் கண்ணா, நீ மயிலாப்பூர்ல அந்த மர்ம வீட்டுக்குப் போனியா இல்லியா?" – இது கதை கேட்டுக் கொண்டிருந்த நான்.  "போனேன்"  மேகாவின் மர்மத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னத்தான் ஆகிறது பார்க்கலாம் என்று ஒரு நாள் அந்த வீட்டுக்குப் போனேன். கதவைத் தட்டினேன். ஒரு வயதான அம்மாள் கதவைத் திறந்தாள். தங்குவதற்கு ஏதாவது ரூம் கிடைக்குமா என்று கேட்டேன். "ஒரு பெரிய ரூம் இருக்கு. அதில தங்கியிருந்த பொண்ணு மூணு மாசமா காணோம். வாடகை பாக்கியிருக்கு. நீங்க வேணும்ணா அந்த ரூமை எடுத்துக்கோங்களேன்" என்றாள்.  அவள் போட்டோவைக் காட்டிக் கேட்டேன், "இவ தான் அந்தப் பொண்ணா பாருங்க"  "இவங்களே தான் சார், எப்ப வர்றாங்க இவங்க?"  "இவ எறந்துட்டா"  "ஓ, என்ன சார் ஆச்சு அவங்களுக்கு. அவங்கள என்னால புரிஞ்சிக்கவே முடிஞ்சதில்ல. வருவாங்க, ரூம்ல உக்கார்ந்து ஏதாச்சும் படிப்பாங்க, சும்மா அந்தரத்த பார்த்துட்டிருப்பாங்க, டீ சாப்பிடுவாங்க, அவ்வளவுதான்"  "அவ இங்க யாரையாவது சந்திப்பாளா?"  "அதெல்லாம் இல்ல சார். ரொம்ப நல்லவங்க. நிறைய பணம் கொடுப்பாங்க"  அதன் பிறகு அவளிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளிடம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.    "இப்ப சொல்லு, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? அந்த பொம்பள உண்மையச் சொல்றாளா இல்லை பொய் சொல்றாளா?"  "உண்மையத்தான் சொல்றா" – இது நான்.  "அப்ப மேகா ஏன் அந்த விடுதிக்குப் போனா?"  "கண்ணா, எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு. அந்தப் பொண்ணு மேகாவுக்கு மர்மங்கள் மேல ஒரு தனி பிரியம். பைத்தியம்னு கூட சொல்லலாம். தன்னை யாரோ ஃபாலோ பண்றதா கற்பனை பண்ணிண்டிருக்கா.  மத்தவங்களையும் நம்ப வச்சிருக்கா. தான் ஏதோ ஒரு மர்மக் கதை ஹீரோயின்னு நெனச்சிண்டு இப்படி விடுதியில போய் உட்கார்ந்த்து தனக்குத் தானே ஒரு சஸ்பென்ஸ உண்டு பண்ணியிருக்கா. அதுல அவளுக்கு ஒரு திருப்தி. அவ்வளவுதான். அவகிட்ட வேற ஏதும் மர்மம் இருக்றதா எனக்கு தோணல"  "நிஜமாவா?"  "நிச்சயமா!"  அவன் மீண்டும் அந்த நோட்டை எடுத்து அவள் முகத்தைப் பார்த்தான். அவள் இன்னும் விளங்காத புதிராக அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் ஒரு சிறுகதை
மீண்டும் ஒரு கதையை மொழிபெயர்க்கும் முயற்சி. Mike Krath எழுதிய A Most Ambitious Experiment என்கிற சிறுகதை. இந்த முறை கொஞ்சம் மாற்றி, கதைமாந்தரையும் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். பிழையிருப்பின் மன்னிக்கவும்.  விளையாட்டு  "கண்மணி, நான் சொல்றதை கவனமா கேட்டுக்க", என்று மதன் சொன்ன போதே தன் கணவன் எக்குத்தப்பாக ஏதோ செய்யப் போகிறான் என்பது புரிந்துவிட்டது கண்மணிக்கு.  "ம்ம்ம்… உனக்கு எப்படி சொல்லிப் புரிய வெக்றது? இப்ப நான் ரொம்ப தூரத்துக்கு ஒரு பயணம் போகப் போறேன். பல வருஷம் உன்னால என்னைப் பார்க்க முடியாது. ஆனா நான் உன்னை வந்து பார்ப்பேன். என்ன?"  மதன் சொன்னதைக் கேட்டால் எந்த சாமன்யனும் அவனை என்னமோ போல ஏற இறங்கப் பார்த்திருப்பான். ஆனால் கண்மணிக்கு இதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. மிகச் சாதாரணமாகக் கேட்டாள், "அப்படி எங்க போறீங்க?"  "எதிர்காலத்துக்கு"  "என்ன….?"  "ஆமாம் கண்மணி, நான் எதிர்காலத்துக்கு போகப் போறேன். உனக்கு இது அதிர்ச்சியா இருக்கலாம். நான் திரும்ப வரும் போது உனக்கு என் மேல கோபமா கூட இருக்கலாம். ஆனா கவலை படாதே. நான் இங்கிருந்து போன 5 நிமிஷத்துல திரும்பி வந்துடுவேன். சரியா?"  "……"  "ஒண்ணும் இல்லடி, நம்ம சீனு மாமா எறந்தப்ப அவர் சொத்துலருந்து நமக்கு அம்பது லட்சம் வந்துது இல்லியா, அதை எதுல இன்வெஸ்ட் பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு. இப்போதைக்கு ஒரு பிளான் பண்ணி வச்சிருக்கேன். அது வொர்க் அவுட் ஆகுதான்னு பார்க்கணும். அதான் ஒரு 20 வருஷம் கழிச்சு என்ன ஆயிருக்குன்னு பார்க்கப் போறேன்", மதன் தொடர்ந்தான்.  கண்மணிக்கு இப்போது புரிந்துவிட்டது. என்னத்தான் மதன் ஒரு மாதிரியான ஆளாக இருந்தாலும்; தன் வீட்டுக் கொல்லைப்புற ஸ்டோர் ரூமில் மணிக்கணக்கில், ஏன், சில சமயம் நாள் கணக்கில் கூடக் கதவைத் தாழிட்டு ஆராய்ச்சி என்று சொல்லி ஏதோ செய்து கொண்டிருப்பவனாக இருந்தாலும், இப்போது அவன் சொல்வது அக்மார்க் பைத்தியக்காரத் தனமாகத் தோன்றியது. தூக்கக் கலக்கத்தில் (அல்லது ஆராய்ச்சி மயக்கத்தில்) ஏதோ உளறுகிறான் என்று நினைத்தாள்.  "சரிங்க… இன்னிக்கு என்ன சமைக்கட்டும்?", சாவகாசமாகக் கேட்டாள்.  "இப்போதைக்கு என்னை எதுவும் கேக்காத. ஒரு அஞ்சு நிமிஷம் பொறு. திரும்பி வந்து சொல்றேன்". மதன் வேகமாகத் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தை நோக்கி நடந்தான்.  எல்லம் ஒரே குழப்பமாக இருந்தது கண்மணிக்கு. 'சரி, என்னமோ செய்து தொலைக்கட்டும்', என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். வீட்டில் தலைக்கு மேல் வேலை இருந்தது. சமையல் செய்ய வேண்டும், துணி துவைக்க வேண்டும், டிவியில் 'தாலி பாக்கிய'த்தில் தொடங்கி வரிசையாகப் பல ஸீரியல்கள் பார்க்க வேண்டும், இன்னும் என்னென்னவோ! எல்லா வேலையும் ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பதற்குள், மதன் சொன்ன விஷயத்தை மறந்தே போனாள்.  "எங்க போனாரு இவரு? ஸ்டோர் ரூம்க்குள்ள போய்ட்டார்னா வெளிய பூகம்பமே வந்தாலும் தலை காட்ட மாட்டார். சாப்பாடு வேற ஆறிப் போகுதே", என்று அங்கலாய்த்துக் கொண்டே கொல்லைப் புறத்தில் சென்று ஸ்டோர் ரூம் கதவைத் தட்டினாள். பதிலேதும் கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு முறை தட்டினாள். ஊஹூம். கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.  வசவசவென்று எலெக்ட்ரானிக் சாமான்கள் எங்கு பார்த்தாலும் கொட்டிக் கிடந்தன. ஏதேதோ விளக்குகள் எல்லாம் எறிந்துகொண்டிருந்தன. கருப்பு நிறத்தில் இருந்த ஒரு விஷயத்திலிருந்து பீப்… பீப்… என்ற சத்தம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் மதனைக் காணோம். வீட்டினுள் இருப்பானோ என்று எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாள். எங்கேயும் மதன் இருக்கவில்லை.  இதற்குள் இருட்டிவிட்டது.

எங்கேயோ வெளியில் சென்றிருக்க வேண்டும், வந்து விடுவார் என்று நினைத்தாள். மேசை மீது அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டாள்.  காலையில் எழுந்து பார்த்த போது, அவள் ராத்திரி எடுத்து வைத்த சாப்பாடு, மேசை மீது அப்படியே இருந்தது. மதன் வரவேயில்லை. "மதன்…மதன்…", என்று உரக்கக் கத்திப் பார்த்தாள். பிரயோஜனமில்லை. ஒன்றும் புரியாமல் உள்ளே போய் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள்.  அதன் பின் மதன் வரவேயில்லை. கொஞ்ச நாள் கழித்து போலீசிடம் சென்றுப் புகார் செய்தாள். அவர்களிடம் நடந்ததைக் கூறினாள். போலீஸ் வந்தார்கள். விசாரித்தார்கள். வீட்டில் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று சோதனையிட்டார்கள். ஏதும் பலனில்லை. மதன் எங்கு சென்றான் என்பது யாருக்குமே தெரியவில்லை.  "உங்க கணவர் காணாமல் போறதுக்கு முன்னால ஏதாவது சொன்னாரா?"  "அஞ்சு நிமிஷத்துல திரும்ப வந்துடுவேன்னு சொன்னாரு"  அதன் பின் போலீஸும் சென்றுவிட்டார்கள். நாட்கள் கழிந்தன. அதன்பின் வாரங்கள், மாதங்கள்… மதன் திரும்பி வருவான் என்கிற நம்பிக்கையே போய்விட்டது கண்மணிக்கு. போலீஸும் தம் தேடுதலை நிறுத்திவிட்டார்கள். எந்தத் தடயமும் கிடைக்காததால் கண்மணியின் கணவன் அவளை விட்டு ஓடிப் போய்விட்டான் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆறு மாதம் கழித்துக் கேஸை மூடிவிட்டார்கள்.  ஆண்டுகள் உருண்டோடின. கண்மணிக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை கிடைத்தது. முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. கண்பார்வை மங்கத் தொடங்கியிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டுத் தன் காலத்தைத் தள்ளினாள். தன்னைவிட்டு ஓடிப்போன கணவனின் மேல் அவளுக்கு ஆத்திரமும் வெறுப்பும் ஏகத்துக்கு வளர்ந்திருந்தது. தன் துர்பாக்கிய நிலைக்கு அவனே காரணம் என்று தினம் தினம் அவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.  மதன் காணாமல் போய் சரியாக இருபது வருடங்கள் ஆயிற்று. மாலை நேரம். இருட்டத் தொடங்கியிருந்தது. கண்மணி தன் வீட்டின் சமையல் அறை மேஜையில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். பின்னால் கொல்லைப்புறத்தில் ஏதோ சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் காலடியோசை கேட்டது. யாரது இந்த நேரத்தில்? மெதுவாக எழுந்தாள். அதற்குள் அந்த சத்தம் தன் கொல்லைப்புறக் கதவை நோக்கி வருவதை உணர்ந்தாள். எச்சரிக்கையாக, கொல்லைப்புற ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தாள். அங்கே, அவள் கண்ணெதிரில் அவளின் கணவன் மதன்! அவளை விட்டுப் பிரிது சென்ற போது எப்படி இருந்தானோ, அப்படியே இருந்தான். இளமை மாறாமல்…!  கண்மணி அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவள் வாயில் வார்த்தைகளே வரவில்லை. கொஞ்ச நேரத்தில் சமாளித்துக் கொண்டு, "நீங்களா…?", என்றாள்.  "சீனு மாமாவோட அந்த அம்பது லட்சம் என்ன ஆச்சு?", மதன் கேட்டான்.  "இத்தனை நாள் நீங்க எங்க போயிருந்தீங்க?"  "அதெல்லாம் விடுடி. அந்த அம்பது லட்சம் என்ன ஆச்சு? அதச்சொல்லு மொதல்ல"  "நல்லா இருக்கு நீங்க சொல்றது. இருபது வருஷத்துக்கு முன்னால என்னை நடுத்தெருவுல அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டீங்க. இப்போ திடீர்னு திரும்பி வந்து அம்பது லட்சம் எங்கேன்னு கேக்றீங்க. நல்லா இருக்குங்க உங்க நியாயம்…"  "ஓ, அப்ப நீ அதை மொத்தமா செலவு செஞ்சிட்டியா? க்ரேட். வெரி க்ரேட். கொஞ்சம் பொறு, இதோ வரேன்"  மதன் மீண்டும் கொல்லைப்புற ஸ்டோர் ரூமினுள் ஓடினான்.  "மதன்…மதன்… எங்க போறீங்க…?", என்று கத்திக் கொண்டே கண்மணி அவன் பின்னால் ஓடினாள். அவள் ஸ்டோர் ரூமினுள் போய்ப் பார்த்த போது மதன் அங்கு இல்லை. மாயமாகிப் போயிருந்தான்.  கண்மணிக்கு எதுவுமே விளங்கவில்லை. மறுபடியும் சமையலறைக்குத் திரும்பினாள். என்ன நடந்தது என்பதை மீண்டும் மனதினுள் ஓட விட்டாள். எதுவு

் புரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருந்தது. அந்த ஐம்பது லட்சம் ரூபாய், மதன் முதலில் காணாமல் போன போது யாரும் சீண்டாமல் அப்படியே இருந்தது. ஆனால், இப்போது, அவள் மனதில் புதிதாக ஏதேதோ தோன்றத் தொடங்கியது.  அந்த ஐம்பது லட்சத்தை மதன் ஒரு டிரஸ்டில் இன்வெஸ்ட் செய்திருந்தான். 20 ஆண்டுகள் ஆகும் வரைத் தன் கைக்கு அந்த பணம் கிடைக்காதபடி செய்திருந்தான். மதன் காணாமல் போய், ரொம்ப நாள் தேடியும் கிடைக்காமல் போகவே, போலீஸ், அவன் இறந்து போய் விட்டதாக முடிவு கட்டினார்கள். அதன் விளைவாக, 20 ஆண்டுகள் பொறுத்திருக்காமலேயே அந்த டிரஸ்ட் கண்மணி வசமானது. ஐம்பது லட்சம் அவளுக்கு உடனடியாகக் கிடைத்தது. அதன் பின்னால்…  கொல்லைப் புறத்தில் மறுபடியும் சத்தம் கேட்டது. மீண்டும் அதே காலடியோசைகள். மீண்டும் ஒரு முறை மதன் அவள் முன் ஆஜரானான். நேராக சமையலறைக்கு வந்தான்.  "இப்ப சொல்லு, அந்த அம்பது லட்சம் என்ன ஆச்சு?"  "நான் தான் சொன்னேனே, அது செலவாகிவிட்டது"  "அது எப்படி முடியும்? நான் அதை ஒரு டிரஸ்டுல போட்டு வச்சிருந்தேனே…"  "நீங்க சொல்றது சரிதான். ஆனா நீங்க எறந்து போய்ட்டதா முடிவு பண்ணி அந்த பணத்த என் கைலியே கொடுத்துட்டாங்க"  "ஓ அப்படி ஆயிடுச்சா? ஒரு நிமிஷம் இரு"  மதன் மீண்டும் மறைந்து போனான்.  கண்மணிக்குக் குழப்பம் இன்னும் அதிகமானது. 'நான் செலவு செஞ்சேனா? எதை செலவு செஞ்சேன்?', தன்னையே கேட்டுக் கொண்டாள். மதன் காணாமல் போன போது, பணத்துக்குத் தான் மிகவும் கஷ்டப்பட்டதை நினைத்துப் பார்த்தாள். மதனுக்கு ஏதோ சொத்து கிடைத்திருப்பதாகச் சொன்னானே என்று அதைத் தேடிப் போனதும், அதை அவன் எங்கோ மறைத்து வைத்திருப்பதாக வக்கீல் சொன்னதும் அவள் ஞாபகத்திற்கு வந்தன. ஆனால் எங்கு மறைத்து வைத்தான்…?  அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மதன் மீண்டும் தோன்றினான். சமையலறைக்கு வந்தான்.  "மதன், இந்த இருபது வருஷத்துல நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன் தெரியுமா உங்களுக்கு? சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாம நின்னேன்"  "கவலை படாத கண்மணி. இதெல்லாமே ஒரு விளையாட்டு. ஒரு கனவு மாதிரின்னு வச்சிக்கோயேன். இன்னும் கொஞ்ச நேரம்தான். அப்றம் எல்லாமே உனக்கு விளங்கிடும்"  "அது சரி… நீங்க பாட்டுக்கு காணாம போய்ட்டீங்களா!, ஏதாச்சும் காய்கறி நட்டுப் பொழைக்கலாமேன்னு கொல்லைப்பக்கம் பூரா தோண்டினேன். அப்பத்தான் அங்க புதைச்சி வச்சிருந்த தங்கக் காசு கிடைச்சது. அத வச்சித் தான்…"  "அடிப்பாவி! அந்த காசை நீ கண்டுபிடிச்சிட்டியா?"  "நீங்க என்ன சொல்றீங்க? ஓஹோ! அப்ப நீங்க தான் அதை அங்க புதைச்சி வச்சீங்களா? எப்படியோ, அந்தக் காசுல தான் ஒரு சின்ன வியாபாரம் ஆரம்பிச்சு, சௌகரியமா வாழ்ந்துண்டிருக்கேன்"  மதன் எதுவும் சொல்லாமல் கொல்லைப்புறம் ஓடி மறைந்து போனான். அவன் திரும்ப வருவான் என்று எதிர்பார்த்து அவன் மனைவி காத்திருந்தாள். ஆனால், அவன் திரும்பவேயில்லை. அவனுக்காகக் காத்திருக்க மனமின்றி, அவள் எழுந்து போய்ப் பாதியில் விட்டு வந்த சமையல் வேலையைத் தொடர்ந்தாள். தன் கணவன் செய்த காரியத்தை நினைத்து அவளுக்குக் கோபம் வந்தது. 'அவர் வரட்டும். இன்னிக்கு இருக்குது அவருக்கு", என்று நினைத்துக் கொண்டாள். தான் ஏன் தன் கணவன் மீதுக் கோபம் கொள்ள வேண்டும்? அவன் தன்னை விட்டு ஓடிப் போனானா என்ன? இல்லையே! ஏதோ பிரமை என்று நினைத்துக் கொண்டாள். 'இப்பல்லாம் பட்டப் பகல்லியே கனாக் காண ஆரம்பிச்சிட்டேன்', – கண்மணி நினைத்துக் கொண்டாள்.  மதன் சாவகாசமாகச் சமையலறைக்குள் நடந்து வந்தான்.  "என்னங்க? இன்னிக்கி என்ன சமைக்க்ட்டும்? நீங்க சொன்னப்றம் தான் சமையலே ஆரம்பிக்கணும்"  "எப்பப் பாரு சமையல் சமையல்! இதைத் தவிர ஒனக்கு ஒண்ணுமே தெரியாதா?"

"ஏங்க? இப்ப என்ன ஆயிடுச்சு?"  "உன் கிட்டேருது ஒரு 20 வருஷம், நம்ம பணத்தைக் காப்பாத்தறதுக்குள்ளே, அப்பப்பா…"  "என்னங்க… என்ன சொல்றீங்க?"  "அல்ப காலம் 20 வருஷம். அது வரைக்கும் கூட உன்னால நம்ம காச செலவழிக்காம பாத்துக்க முடியாதாடி?"  "என்னங்க என்னென்னமோ உளர்றீங்க? ஒரு அஞ்சு நிமிஷத்துல திரும்பி வரேன்னு சொல்லி போனீங்க. இப்ப திரும்பி வந்து, ஏதோ பணம், 20 வருஷம் அது இதுன்னு ஏகத்துக்கும் பொலம்ப்றீங்க… என்னங்க ஆச்சு உங்களுக்கு? ராத்திரி கண் முழிச்சி வேலை பாக்காதீங்கன்னா கேக்றீங்களா? வேண்ணா டாக்டர் கிட்ட போலாமா?", அக்கறையுடன் கேட்டாள் கண்மணி.  மதன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான். இவளிடமிருந்து 20 லட்சத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று எண்ணினான். சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இவளைக் கொன்றுவிட்டால் என்ன? இவளை இப்போதைகுக் கொன்றுவிட்டு, 20 வருடங்கள் முன்னோக்கிச் சென்று தன் 20 லட்சம் என்ன ஆகிறது என்று பார்க்கலாம்; பிறகு, ஒரு 5 நிமிடங்கள் முன்னால் திரும்பி, தன் மனைவியுடன் தன் வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று திட்டம் போட்டான். அருமையான திட்டம்!  "கண்மணி, அந்த கைதுடைக்கிற துணி எங்க இருக்கு?"  "இந்தாங்க"  அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் அத்துணியை அவள் கழுத்தில் சுற்றி நெரிக்கத் தொடங்கினான். "கவலை படாத. இது ஒரு சின்ன விளையாட்டு, அவ்வளவுதான்", என்று கூறிக் கொண்டே துணியை இறுக்கினான். சற்று நேரத்தில் கண்மணி மடிந்து சாய்ந்தாள்.  மதன் கடகடவென்று கொல்லைப்புறம் போய் மறைந்தான். இருபது வருடங்கள் கடந்து தோன்றினான். மீண்டும் கொல்லையிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்தான்.  "யார்றா அது?", ஒரு அழுத்தமான ஆண்குரல் கேட்டது.  அய்யோ! இதைப் பற்றி அவன் யோசிக்கவே இல்லையே. இப்போது என்ன செய்வது? எங்கேனும் ஒளிந்து கொள்ளலாமா என்று சுற்றிலும் இடம் தேடினான். டூ லேட். அந்த ஆள் கையில் துப்பாக்கி வைத்திருந்தான்.  "அசையாதே அங்கேயே நில்லு", – இது அந்த ஆளின் குரல்.  "அவசரப்பட்டு சுட்டுடாத. நான் சொல்றத கொஞ்சம் கேளு"  காலம் கடந்துவிட்டது. அவன் சுட்டான். மதன் விழுந்து மடிந்தான். விளையாட்டு முடிந்தது.

ஒரு சிறுகதை
முதலில் ஒரு சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்று தோன்றியதால், இக்கதையை எழுதியிருக்கிறேன். ஆங்கில மூலம்: Fernando Sorrentino எழுதிய There's a Man in the Habit of Hitting Me on the Head with an Umbrella என்கிற சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி செய்துள்ளேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்.  எப்போதும் ஒருவன் என் தலையில் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான்  ஒரு மனிதன் எப்போதும் என் தலையில் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான். அதனை 'அடி' என்றுகூட சொல்ல முடியாது. ஒரு குடையால் உங்கள் தலையில் லேசாகத் தட்டினால் எப்படியிருக்கும்? அது மாதிரிதான். ஆனால், விடாமல், நிறுத்தாமல்…! அவன் அப்படித் தட்ட ஆரம்பித்து இன்றைக்குச் சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. முதலில் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லைதான். ஆனால் போகப் போகப் பழகிவிட்டது.  அவன் பெயர் கூட எனக்குத் தெரியாது. எல்லோரும் போல சாதாரணத் தோற்றம் அவனுக்கு. நடுத்தர வயது. எதைப்பற்றியும் சஞ்சலமில்லாத சாந்தமான முகம். காதுகளின் அருகில் தலைமுடி இப்போதுதான் லேசாக நரைக்க ஆரம்பித்திருக்கிறது. மையினால் வரைந்தது போல மெலிதான மீசை. மாநிறம். அரைக்கை சட்டையும் தொளதொளவென்று ஒரு பேன்ட்டும் அணிந்திருக்கிறான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவனைச் சந்தித்தேன். மாலை சுமார் 5 மணி இருக்கும். தீபாவளிக்காக ஷாப்பிங் முடித்துவிட்டு, மாம்பலம் ரயில் நிலையத்தில் கைநிறைய பைகளுடன் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தேன். யாரோ லேசாக என் தலையில் தட்டுவது போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன். அதே மனிதன். அன்றிலிருந்து, இன்று நான் இதை எழுதிக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தில் கூட என் பின்னால் நின்று கொண்டு ஒரு இயந்திரத்தைப் போல் மந்தமாக, ஆனால் உறுதியாகத் தன் குடையால் தட்டிக் கொண்டே இருக்கிறான்.  யாரோ ஒருவன் ரயில் நிலையத்தில் என் தலையில் அடிக்கிறான் என்றவுடன் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. "யோவ் நீ என்ன பைத்தியமா?" என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன். அவன் நான் சொன்னதைக் காதில் போட்டுகொள்ளாமல், தன் காரியமே கண்ணாக இருந்தான். போலீசிடம் புகார் செய்வதாகக் கூட பயமுறுத்திப் பார்த்தேன். ஊஹூம்! எதற்குமே அவன் மசியவில்லை. குடையால் தட்டுவதையும் நிறுத்தவில்லை. கொஞ்சம் ஆத்திர மிகுதியால் ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டேன். வலியால் முனகிக்கொண்டே அவன் கீழே விழுந்தான். ஆனால் விழுந்த வேகத்திலேயே மீண்டும் எழுந்து, ஒரு வார்த்தை கூட திருப்பிப் பேசாமல், மிகுந்த பிரயத்தனப்பட்டு தன் குடையைத் தூக்கி, முன்பு போலவே என் தலையில் தட்டத் தொடங்கினான். அவன் மூக்கில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவன் என்னை ஓங்கி அடிக்கவில்லை. எனக்கு ஒரு வலியும் உண்டாக்கவில்லை. லேசாகத் தட்டிக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அவன் தட்டிக் கொண்டிருந்ததே ரொம்ப அசௌகரியமாக இருந்தது. உதாரணத்திற்கு, ஒரு ஈ உங்கள் நெற்றியில் வந்து உட்கார்ந்து கொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எந்த வலியும் அதனால் இருக்காது. ஆனால் அந்த அசௌகரியத்தை உடனே விரட்டியாக வேண்டும் என்று செயல்படுவீர்கள் அல்லவா? அப்படித்தான் இருந்தது எனக்கும். அவனின் குடைத் தட்டல்கள், ஒரு ஈ மறுபடியும் மறுபடியும் வந்து என் நெற்றியில் உட்காருவது போல இருந்தது.  இதற்குள், நிச்சயம் அவன் ஒரு பைத்தியமாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணினேன். அங்கேயே இருந்து கொண்டு அவனை விரட்ட முயன்றால் பயனிருக்காது என்று ஓடத் தொடங்கினேன். (கல்லூரியில் படித்த போது, நான் ஒரு ஓட்டப்பந்தய வீரன் என்பதை நினைவில் கொள்க

). அவனும் என் பின்னால் ஓடி வந்து அடிக்கத் தொடங்கினான். நான் இதே போல் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தால் அவனும் ஓடி ஓடிக் களைத்து, சோர்ந்து விழுந்து இறந்து போய் விடுவானோ என்றெல்லாம் என் மனம் நினைத்தது.  ஓடுவது எனக்கே சற்று பைத்தியக்காரத் தனமாகத் தோன்றியது. சட்டென்று ஓடுவதை நிறுத்தி, அவன் கண்களை நேருக்கு நேர் உற்றுப் பார்த்தேன். ஒரு கெட்ட எண்ணமோ, நிம்மதியோ, மகிழ்ச்சியோ, எதுவுமே அவன் முகத்தில் தெரியவில்லை. உணர்ச்சியில்லாமல், என் தலையில் தட்டுவதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்தான். போலீசிடம் புகார் செய்து விடலாமா என்று யோசித்தேன். போலீசிடம் சென்றால் என்னவென்று புகார் செய்வது? "சார், இந்த ஆள் விடாம குடையால என் தலையில தட்டிகிட்டே இருக்கான்" என்று சொல்வதா? அவர்கள் என்னை நம்புவார்களா? இதற்கு முன்னால் இது போன்ற புகாரை யாரேனும் கொடுத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. போலீசார் என்னையே சந்தேகிப்பார்கள். அவனுக்கு பதிலாக, என்னைப் பைத்தியம் என்று முடிவுகட்டுவார்கள். என்னைக் கைது பண்ணக் கூட வாய்ப்பு இருக்கிறது.  போலீசிடம் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு, வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம் என்று முடிவு செய்தேன். 38-ஆம் நம்பர் பேருந்தில் ஏறினேன். அவனும் என்னைத் தலையில் தட்டிக் கொண்டே என்னைத் தொடர்ந்து பேருந்தில் ஏறினான். நான் முதல் ஸீட்டில் அமர்ந்தேன். அவன், என் அருகில் நின்றுகொண்டு ஒரு கையால் மேலே கம்பியைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் வைத்திருந்த குடையால், முன்பு போலவே என் தலையில் தட்டத் தொடங்கினான். பேருந்தில் என்னோடு பயணம் செய்தவர்கள் முதலில் தங்களுக்குள்ளேயே லேசாகச் சிரித்துக் கொண்டார்கள். பேருந்து ஓட்டுநர் எதிரில் இருந்த கண்ணாடி வழியாக என்னைப் பார்த்து சிரித்தார். நேரம் போகப் போக, அந்தப் பேருந்தே சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கியது. எல்லோரும் தங்களுக்குள் என்னைப் பற்றிக் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள். நான் பேருந்தைவிட்டு என் நிறுத்தத்தில் இறங்கிய போது, பேருந்தில் இருந்த எல்லோரும் என்னையே திரும்பிப் பார்த்துக் 'கொள்'ளெனச் சிரிக்க, எனக்கு அவமானம் தாங்க முடையவில்லை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் அவன் மட்டும் தன் வேலையை உறுதியாகத் தொடர்ந்தான்.  பேருந்தில் இருந்து இறங்கினேன். அல்ல அல்ல, இறங்கினோம். அவனும் என்னுடன் இறங்கிக் கொண்டான். என் தெருவில் நாங்கள் இருவரும் நடந்து சென்ற போது, எல்லோரும் அர்த்தமில்லாமல் எங்களையே வெறித்துப் பார்த்தார்கள். "என்னய்யா பார்க்றீங்க? இதுக்கு முன்னால ஒருத்தன் இன்னொருத்தன் தலையில குடையால அடிக்கிறத நீங்கள்ளாம் பார்த்ததே இல்லியா?" என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அவர்கள் இப்படியொரு விஷயத்தைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான் என்று பட்டது. தெருவில் நான்கைந்து வால் பையன்கள் எங்கள் பின்னால் 'ஓ'வென்று கூச்சல் போட்டுகொண்டே ஓடிவந்தார்கள்.  என் மனதில் நான் ஒரு திட்டம் தீட்டி இருந்தேன். வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றதும், அவனை உள்ளே வர விடாமல் கதவை அவன் முகத்திற்கு நேரே மூடிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவன் என் எண்ணங்களை முன்னமே அறிந்து வைத்திருந்தாற்போல், தாழ்ப்பாளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, என்னைத் தள்ளிவிட்டு உள்ளே வந்தான்.  அப்போது முதல், அவன் நிறுத்தாமல் தன் குடையால் என் தலையில் தட்டிக் கொண்டேதான் இருக்கிறான். எனக்குத் தெரிந்த வரைக்கும் அவன் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை. அவனின் ஒரே கடமை, என் தலையில் தட்டுவதுதான். நான் எங்கு சென்றாலும் என் கூடவே வருகிறான். எப்போதும் என் உடனேயே இருக்கிறான். என் அ

ந்தரங்க நடவடிக்கைகளில் கூட! முதலில் அவன் என் தலையில் தட்டிக் கொண்டே இருப்பதால் இரவில் என்னால் தூங்கவே முடிந்ததில்லை. ஆனால் இன்று, அவனின் குடை அடிகள் இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது போல் இருக்கிறது.  இருந்தாலும், எங்கள் இருவருக்குள் இருந்த உறவு சுமூகமாக இருந்தது என்று சொல்ல முடியாது. நானும் பல சமயங்களில், பல விதங்களில் அவனிடம் கேட்டுப் பார்த்திருக்கிறேன் – அவன் ஏன் இப்ப்டியே தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறான் என்று. ஆனால் அதனால் எவ்விதப் பயனும் இல்லை. ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தன் வேலையை நிறுத்தாமல் தொடர்கிறான். பல தடவை அவனை அடித்திருக்கிறேன், அவன் முகத்தில் குத்தியிருக்கிறேன், அவனை உதைத்திருக்கிறேன், ஏன்? குடையால் கூட அடித்துப் பார்த்திருக்கிறேன். ஏதோ அடி வாங்குவதற்கே பிறந்தவன் போல என் எல்லா அடிகளையும் அவன் வாங்கிக் கொள்வான். அதுவும் அவன் கடமையின் ஒரு பகுதி போல் அமைதியாய் இருப்பான். இந்த விஷயம் தான் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு அதீத நம்பிக்கையுடன், பக்தியுடன் அவன் தன் வேலையைத் தொடர்ந்தான். ஏதோ கண்ணுக்குத் தெரியாத தன் எஜமானன் சொன்னதைத் தட்டாமல் செய்கிற அடிமை போன்ற அவனின் நடவடிக்கைகள் எனக்கு விளங்கியதே இல்லை.  அவன் சாப்பிடாமல் தூங்காமல் அதிசயப் பிறவியாக இருந்தாலும், நான் அடிக்கும் போது அவனுக்கு வலிக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அவன் பலவீனமானவன் தான் என்பதும் எனக்கு விளங்குகிறது. ஒரே ஒரு துப்பாக்கித் தோட்டா இருந்தால் அவன் தொல்லையிலிருந்து தப்பி விடலாம் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனக்குப் புரியாத விஷயம், அந்தத் தோட்டாவால் அவனைக் கொல்வதா, அல்லது என்னையே சுட்டுத் தற்கொலை செய்துகொள்வதா என்பதுதான். நாங்கள் இருவரும் இறந்து போன பிறகு அவன் என் தலையில் தன் குடையால் அடிப்பதை நிறுத்திக் கொள்வானா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், இந்த சம்பாஷணைகள் தேவையற்றவை. துப்பாக்கியெடுத்து அவனையோ அல்லது என்னையோ நிச்சயம் என்னால் கொல்ல முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.  மாறாக, இப்போதெல்லாம் எனக்கு ஒரு கவலை உருவாகியுள்ளது. அந்தப் பெயர் தெரியாத மனிதனின் குடை அடிகள் இல்லாமல் என்னால் உயிர் வாழவே முடியாது என்று தோன்றுகிறது. சமீப காலங்களில் அடிக்கடி எனக்கு ஒரு இனம்புரியாத அச்சம் ஏற்படுகிறது. ஒரு வேளை, எனக்கு மிகவும் அவசியமாகத் தேவைப் படுகிறபோது இந்த மனிதன் என்னோடு இல்லாமல் போய்விடுவானோ…? இத்தனை நாட்கள் இரவில் நான் நிம்மதியாகத் தூங்குவதற்கு உதவியாக இருந்த அவனின் குடை அடிகள் நிரந்தரமாக இல்லாமல் போய்விடுமோ…? பயமாக இருக்கிறது.