Posted by: Deepak Venkatesan on: January 15, 2007
ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக [...]
Posted by: Deepak Venkatesan on: January 11, 2007
என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா – பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் [...]
Posted by: Deepak Venkatesan on: January 1, 2007
எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள் தேர்வு செய்தோம். [...]
Posted by: Deepak Venkatesan on: October 28, 2006
சென்னையில் அழகான மழை! மழை என்றாலே சென்னை மிகவும் சுவாரஸ்யமாகி விடுகிறது. தெருவெல்லாம் கண்ணாடிகளாகி விடுகின்றன. கொஞ்சமாக பைக் சறுக்குகிறது. எல்லோரும் நத்தைகள் போல நின்று நின்று கவனமாக சாலைகளில் செல்கிறார்கள். குடைகள் இல்லாதவர்கள் தெருவில் ஓட்டம் பிடிக்கிறார்கள். தொப்பலாக நனைந்தும், வீரமாக வண்டியோட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். கார்களில் விருட்டெனப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள், இப்போது கார்களைச் செலுத்திக்கொண்டு, முன்னால் அதீத ஜாக்கிரதையுடன் செல்கிற சைக்கிள்காரனைப் பின்தொடர்ந்து, மெதுவாக மெதுவாக பவனிவருகிறார்கள். ஆட்டோக்கள் ‘நானே ராஜா’ என்று பாகுபாடில்லாமல் எல்லோர் [...]
Posted by: Deepak Venkatesan on: April 10, 2005
ஒரு நாளைக்கு 30 மணி நேரம் இருந்தால் கூடத் தேவலாம். கல்லூரி project work-இன் அடங்காத் தாண்டவங்களுக்கிடையே எழுதுவதற்கு சமயம் கிடைப்பது – கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைப்பது போல் ஆகிவிட்டது. இப்போது பருவமழை – அதுதான் எழுத சமயம் வாய்த்தது. எழுதுகிறேன்… நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அப்பாவித்தனமான ஃபர்ஸ்ட் இயர் பையனாக கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து, பல சமாசாரங்களிலும் மேதாவிலாசம் பெற்று 'அடப் பாவி!' த்தனமான ஃபைனல் இயராக உருமாறியிருக்கும் இன்று வரையில் நான் செய்ததெல்லாம், சில foreign [...]