Amusingly Simple

Archive for the ‘பார்வை’ Category

வாரணம் ஆயிரம்

Posted by: Deepak Venkatesan on: November 30, 2006

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பது என்பது மிகப்பெரும் சர்ச்சையாகி, பின் வரிவிலக்கு அறிவிப்பால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தமிழில் பெயர் வைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இயக்குநர் கௌத்தம் மேனன், சூர்யாவுடனான தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதிலிருதே எல்லோரும் “வாரணம் ஆயிரம்” பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “வாரணம் என்றால் என்ன?” என்பது தான் பேச்சின் சாராம்சம். இப்படத்த்ன் தலைப்பு, “வர்ணம் என்னவோ…”, “வானரம் ஆயிரம்”, “வருணம் ஆயிரம்”, “வரணும் ஆயிரம்” என்று நண்பர்கள் நாவிலெல்லாம் [...]

இன்றைய தமிழகம் பிறந்த நாள்

Posted by: Deepak Venkatesan on: November 1, 2006

தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் சில பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியிருந்த ‘மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி‘, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாட்டைக் கொண்ட ‘மெட்ராஸ் ஸ்டேட்‘ உதயமானது நவம்பர் 1, 1956-இல். மாநிலங்கள் ம்றுசீரமைப்புச் சட்டம் (States Reorganisation Act, 1956) அமலாக்கப்பட்டதால், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று மொழி அடிப்படையில் தனித்தனி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைக்குச் சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன. கர்நாடகாவில் இந்நாளை, ‘கன்னட ராஜ்யோத்ஸவா‘ (Rajyotsava day) என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். கேரளாவில் [...]

சுஜாதாவின் சில்வியா

Posted by: Deepak Venkatesan on: May 16, 2006

வெகு நாள் கழித்து விகடனில் சுஜாதா அவர்கள் புதிய தொடர்கதை எழுதுகிறார் என்று கேள்விப்பட்ட அடுத்த நொடி ஓடிச் சென்று விகடன் வாங்கி விட்டேன். சுஜாதா அவர்களின் எழுத்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்பதால் பல எதிர்பார்ப்புகள் எனக்கு. அதிலும் கணேஷ் வசந்த் நாவல் என்பதால் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகவே இருந்தது. வழக்கம் போல் கலர் கலராக படம் போட்டிருந்த விகடனின் டெம்ப்டேஷனை எல்லாம் தாண்டி, சுஜாதா பக்கத்திற்கு வந்தேன். கிடைத்தற்கரிய செப்பேடு கிடைத்துவிட்டாற்போல வாசிக்கத் [...]

புதுமலர்ச்சி

Posted by: Deepak Venkatesan on: August 16, 2005

வெகு நாள் கழித்து மீண்டும் வலைபதிக்கிறேன். என் வலைப்பதிவைப் படித்து ஊக்கப் படுத்திய அன்பர்களுக்கும், என் இனிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இனியும் தொடர்ந்து இங்கே எழுத விரும்பி, காற்று வெளியிடை, என் எண்ணத் தீற்றல்களுக்கு மீண்டும் புதுமலர்ச்சி அளிக்கிறேன். Orkut நண்பர்கள் இணையத்தளம் வழி அறிமுகமான என் இனிய நண்பர் பிரதீப் (Cognizant) அவர்களின் ஆங்கில வலைப்பதிவுக்கு என் வாழ்த்துகள். தனது நண்பர்கள் தினப் பதிவில் ஒரு இன்ப அதிர்ச்சியாக என் பெயரையும், என் வலைப்பதிவு [...]

கேட்டுக்க மச்சி…

Posted by: Deepak Venkatesan on: March 16, 2005

மூச்சு விடாமல் பாடுபவர்களுக்கு நம்மூரில் என்றுமே மவுசு உண்டு. டிஜிட்டலில் குரல்களைச் செதுக்கும் இக்காலத்தில் மூச்சு விடாமல் பாடுவது ஒன்றும் மலையை நகர்த்துகிற செயல் இல்லைதான். இருந்தாலும் பள்ளியில் படித்த சமயம், நண்பன் ஒருவன் SPB போல மூச்சு விடாமல் பாடி அரங்கில் கைத்தட்டல் வாங்கிய போது, என் வயிறு அண்ணாமலை தீபம் மாதிரி சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஷங்கர் மஹாதேவனின் Breathless வரிகள் அனைத்தும் எனக்கு அத்துப்படிடா என்று பீத்திக் கொள்வான் இன்னொருவன். (அடியேன் [...]


Deepak Venkatesan