Posted by: Deepak Venkatesan on: January 13, 2010
இணையத்தில் வளைத்தது… அவனுக்குப் பிறவியிலேயே வலது கை கிடையாது. அவனுக்கு ஒன்பது வயது நிரம்பியபோது, ‘கராத்தே’ கற்றுக்கொள்ள விரும்பினான். பெற்றோரிடம் தன் Karate விருப்பத்தைச் சொன்னான். மகனின் துணிவைக் கண்டு மகிழ்ந்த பெற்றோர், அவனை கராத்தே பள்ளிக்கு அனுப்பினர். சில நாட்களிலேயே நன்றாகக் கராத்தே பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினான். கராத்தே போட்டி ஒன்றில் பங்குபெற விரும்பி, தன் ஆசிரியரிடம் இது தன்னால் முடியுமா என்று கேட்டான். “என் மீது முழு நம்பிக்கை வைத்து, நான் சொல்வதை அப்படியே [...]
Posted by: Deepak Venkatesan on: May 8, 2009
பெங்களூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் இருக்கும் அழகான நகரம் மைசூரு. மைசூருக்கு 10 கி.மீ முன்பு வலது புறமாகச் செல்லும் சிறிய சாலையில் இறங்கி, ஒரு 5 கி.மீ அளவுக்குச் சென்றால் கிடைக்கிற இயற்கையின் அற்புதமான படைப்பு தான் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிய உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் விதவிதமான வண்ணமிகு பறவைகளைக் காண சரியான இடம் தான் ரங்கனதிட்டு. நானும் எனது நண்பர்கள் கார்த்திகேயன், சுப்ரமணியன் [...]
Posted by: Deepak Venkatesan on: September 13, 2008
கன்னடத்தில் “ஹொகே” என்பது புகை. உயரமான அருவியிலிருந்துப் பொழிகிற தண்ணீர் நம் மீது புகை போல் படர்ந்து, நம் நிழற்படக் கருவியையும் ஒரு கை பார்க்கிற போது தான் இந்தப் புகையின் தாக்கம் நமக்கு நன்றாகப் புலனாகிறது. ‘ஒகேனக்கல்’ என்பது ‘புகைக்கிற கல்’ என்று சொல்லலாம். கன்னடம், தமிழ் என்று இரண்டு கலாச்சாரங்களில் கலந்த என் போன்ற, ரஜினிகாந்த் போன்றவர்களை அவ்வப்போது தர்ம சங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடுகிற இந்த ஒகேனக்கல்லில் அப்படி என்னத்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் [...]
Posted by: Deepak Venkatesan on: November 3, 2007
பதிவுப் பிரியர்களுக்கு வணக்கம். நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன். ஆனால், இம்முறை சென்னையிலிருந்து அல்ல… பெங்களூரிலிருந்து… நன்றி: சிட்னி ஊர் மாறினாலும், எழுதுகிற விஷயம் அதே தான்… சும்மா அதையும் இதையும் எழுதுகிறேன்… இனி நம்ம பெங்களூரு பற்றிய செய்திகளை அதிகம் எதிர்பார்க்கலாம்.
Posted by: Deepak Venkatesan on: January 15, 2007
ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக [...]