Amusingly Simple

Archive for the ‘பொது’ Category

சென்னை மழைச் சுற்றுலா

Posted by: Deepak Venkatesan on: October 28, 2006

சென்னையில் அழகான மழை! மழை என்றாலே சென்னை மிகவும் சுவாரஸ்யமாகி விடுகிறது. தெருவெல்லாம் கண்ணாடிகளாகி விடுகின்றன. கொஞ்சமாக பைக் சறுக்குகிறது. எல்லோரும் நத்தைகள் போல நின்று நின்று கவனமாக சாலைகளில் செல்கிறார்கள். குடைகள் இல்லாதவர்கள் தெருவில் ஓட்டம் பிடிக்கிறார்கள். தொப்பலாக நனைந்தும், வீரமாக வண்டியோட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். கார்களில் விருட்டெனப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள், இப்போது கார்களைச் செலுத்திக்கொண்டு, முன்னால் அதீத ஜாக்கிரதையுடன் செல்கிற சைக்கிள்காரனைப் பின்தொடர்ந்து, மெதுவாக மெதுவாக பவனிவருகிறார்கள். ஆட்டோக்கள் ‘நானே ராஜா’ என்று பாகுபாடில்லாமல் எல்லோர் [...]

தீபாவளி நல்வாழ்த்துகள்!

Posted by: Deepak Venkatesan on: October 21, 2006

இந்த தீபாவளிக்கு நான் கடைசி நிமிடத்தில் அடையார் ஆனந்த பவனிலோ, ஸ்றீ மித்தாயிலோ, அர்ச்சனா ஸ்வீட்ஸிலோ, நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, பெருமூச்சு விட்டபடி இனிப்புகள் வாங்காமலேயே வீடு திரும்பியது போல, நீங்கள் செய்யாமல், (அடுத்த தீபாவளிக்காவது), உஷாராக 4 நாட்கள் முன்பே இனிப்பு வகைகளை சாவகாசமாக வாங்கி உண்டு களியுங்கள். அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்! நன்றி: http://www.bbc.co.uk 

நடைபோட்ட நாட்கள்

Posted by: Deepak Venkatesan on: October 17, 2006

நிலப்பரப்பின் அடியில் எப்போதாவது அழுத்தம் அதிகமாகும் போது, பூமி லேசாகச் சிலிர்த்துக் கொள்வதுண்டு. அது பூகம்பமாக வெடித்து நம்மை ஒரு கை பார்த்துவிடுகிறது. அப்படி – எப்போதாவது சிலிர்த்துக் கொள்ளும் பூமி போல, எப்போதாவது சமயமும் சமாச்சாரமும் கிடைக்கிற போது தான் எழுதுவேன் போலும்… இருந்தாலும் இத்தனை நாளும் நான் எழுதுவதை நாலு பேருக்குச் சொல்லிக் கொள்ள உதவிய தமிழ்மணத்திற்கு என் நன்றிகள். எங்கிருந்தோ தள்ளிவிடப்பட்டு இங்கு வந்து விழுந்திருக்கிற (பாவம்) உங்களுக்கும் என் நன்றிகள். இனி [...]

புதியது – deepakvenkat.com

Posted by: Deepak Venkatesan on: October 15, 2006

என்னுடைய வலைப்பதிவு பல பரிமாணங்களையும் தாண்டி, இன்று, தனக்கென்று ஒரு தனிப்பட்ட வலை முகவரியைப் பெற்றுவிட்டது. Blogger-இல் இயங்கிக் கொண்டிருந்து, பின்னால், சில மாற்றங்களைச் சந்தித்து, நடுவில் நின்று போய், இப்போது WordPress உதவியால் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. இத்தனை நாட்களிலும் இடைவிடாது என் பதிவுகளைப் படித்து என்னை ஊக்கப்படுத்தி வந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைச் சொல்லும் கடமை உண்டு எனக்கு. மீண்டும் முழு வீச்சில் இறங்குகிறேன். கூடவே ஒரு ஆங்கில வலைப்பதிவையும் தொடங்குகிறேன். உங்கள் [...]

அண்மைக் காலங்களில் திரைப்படங்களில் மட்டுமே கலக்கி வந்த ஹீரோயின்கள் பலர், இம்முறை தேர்தலில் கட்சிகளின் அமோக ஆதரவால், தமிழகமெங்கும் அரசியல் மேடைகளிலும் கலக்கியது செய்தி. ஆனால், இங்கே நான் குறிப்பிடுவது சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகைகளைப் பற்றியல்ல… நிஜமாகவே சுழற்றியடிக்கும் சூறாவளிகளைப் பற்றி. முதலில் அமெரிக்காவில் ‘காத்ரினா’ என்ற சூறாவளி தாக்கியது. அதன் பிறகு ‘ரீட்டா‘. அதே மூச்சோடு நம்மூரிலும் ‘மாலா‘, ‘ஃபனூஸ்’ என்று தன் பங்கிற்கு பெண் புயல்கள் சக்கைப் போடு போட்டன. இப்போது சீனாவில் [...]


Deepak Venkatesan

  • Deepak: The same is true for e-stamping also. Type as much as possible on the page-1 and the rest on the next page. Authorities expect that the contents star
  • suchintya: hi Deepak, I think you misread the query. I am asking about estamping and not the normal stamp paper agreement. After I have received the estamp pa
  • Deepak: Start right on the first page where you got the franking done, and where the registrar has signed. Even if the space is small here, start from the fro