“டேய், கையை வச்சிக்கிட்டு – சும்மா இருடா”


கண்ணதாசன் இன்று இருந்தால் கண்ணீர்தாசன் ஆகியிருப்பார். இன்றைய சினிமாப் பாடல்கள் (?), பாடல்கள் என்கிற status-இலிருந்து இறங்கி, கதாநாயகன், கதாநாயகியின் காம லீலைகளில் இடம்பெறும் முணுமுணுப்புகளாக மாறி வருகிறது. இது வரவேற்கத்தக்கதா இல்லையா என்பதை விடுங்கள். கவிஞர்களின் கற்பனை வறண்டு விட்டதா, அல்லது அஷ்டகோணத்தில் வளர்ந்து விட்டதா என்பது தான் புரியாத புதிராய் உள்ளது. பாடல்களில் இருந்த அந்த சூட்சமம், நெளிவு எல்லாம் மாறி, ஒரேடியாக வெடித்துச்சிதறும் உணர்ச்சிக் கொப்பளங்களாகி விட்டன என்றுதான் கருதத் தோன்றுகிறது. இங்கே ஒரு லிஸ்டே கொடுக்கலாம்.

சமீபத்தில் கேட்ட ஒரு பாட்டு, “திருட்டு ராஸ்கல், திருட்டு ராஸ்கல், திருடவாயேன்டா” என்பது. கவிஞர்களுக்கு எப்படித்தான் கற்பனை நீரோடை இப்படியெல்லாம் வளைந்து ஓடுகிறது என்றே புரியவில்லை. அன்றாடம் மச்சான்க்ள் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் எல்லாம் பாடல் வரிகளாகின்றன என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சியோ என்னவோ தெரியவில்லை.

இன்னும், கவிஞர்களின் காம profile-இல் சேர்க்க வேண்டியவை எத்தனையோ. குறுக்கு சிறுத்த modern யுவதி, இடுப்போரம் மச்சம் காட்டவா என்று public-ஆக மச்சானிடம் கேட்பது எங்காவது நடக்குமா? (அந்த பாடலின் மற்ற வரிகளைப் பற்றி கேட்காதீர்கள்). The degree of raunchiness in Tamil movie songs has grown up to irritating heights in the recent years என்று தான் சொல்ல வேண்டும். நம்மோடு சேர்ந்து ஆடுவதற்கு என்றே ஒரு சில மாதுகள் தமிழ்நாட்டில் எங்கேனும் கிடைக்கிறார்களா என்று தெரியவில்லை. திரையில் மட்டும் மலிந்து இருக்கிறார்கள். இவர்களில் மே மாதம் 98-இல் மேஜர் ஆனவர்கள் இருக்கிறார்கள், அத்தை பெற்ற தத்தைகள் இருக்கிறார்கள், ‘சீனா தானா’ என்று ஆடிக்களிக்கிறார்கள், சரக்கு வச்சிருக்கேன் என்று clue கொடுக்கிறார்கள், கட்டிப்புடிடா என்று உரிமையோடு கேட்கிறார்கள், சின்ன வீடாய் வர ரெடியாக இருக்கிறார்கள், இன்னும் என்னென்னவோ…

மார்ச் 8 உலக மகளிர் தினம் என்கிறோம், பேரணி நடத்துகிறோம், பேட்டி அளிக்கிறோம், முகப்புக் கட்டுரை எழுதுகிறோம், சிறப்பு மலர் வெளியிடுகிறோம், அறிக்கை கொடுக்கிறோம், அரசாணை பிறப்பிக்கிறோம்… ஆனால் 21-ஆம் நூற்றாண்டிலும், பெண்ணைப் போகப் பொருளாகவே வைத்துக் கொண்டு பம்மாத்து காட்டுகிறோம். 33-க்காக அவர்கள் இன்னும் இரந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை, இட ஒதுக்கீடு செய்ய நாம் யார்? -என்று. குடும்பத்தில் இன்றும் பெண்ணுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற துணிச்சல் இல்லை.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் எத்தனை நாட்கள் தான் பெண் மறைந்து இருந்து வாழ்வாள்? பெண்ணுக்கு வெற்றி எப்போது? அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது. அது மாறும் வரை, ‘அழகா இருக்காங்க’ என்று சொல்லி தலையில் மிளகாய் அரைத்துப் பணம் பார்ர்க்கும் கூட்டம் அடங்காமல் அட்டகாசித்துக் கொண்டுதான் இருக்கும்.

Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

2 thoughts on ““டேய், கையை வச்சிக்கிட்டு – சும்மா இருடா””

  1. அய்யா ராசா. இந்த கொடுமைய எதுத்துதான் ‘பெரியம்மா பொண்ணை ரசிக்கலாம்’னு ஒரு பதிவு போட்டேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s