கம்ப்யூட்டரும் கவிதையும்


கல்லூரியில் படித்த போது, செயற்கை அறிவு (Artificial Intelligence) தொடர்பாகச் சில விஷயங்கள் படித்து வந்தேன். பொதுவாகவே, அடிப்படைக் கோட்பாடுகளை விட, extraordinary-யான விஷயங்களில் தான் மாணவர்கள் முதலில் மூக்கை நுழைப்பார்கள். அடிப்படைகள் விளங்கியதோ இல்லையோ, அற்புதங்கள் நிகழ்த்திவிட வேண்டும் என்று துடிப்பார்கள். Fuzzy logic, Neural Network, AI என்றால், மாணவர்களுக்கு அது ஒரு கனவுலகம். Fuzzy-யில் எப்படியாவது ஒரு project செய்து விடுவேன் என்று கொள்கை கோஷமிட்டுத் திரிவார்கள். ரிஸர்ச், டெவலப்மெண்ட், கிரியேட்டிவிட்டி, இன்னொவேஷன், புடலங்காய் என்றெல்லாம் ஓவராகப் பீட்டர் விட்டு அலைவார்கள். எல்லாம் final year வரும் வரையில் தான். அதன் பிறகு, எங்காவது போய், யாரையாவது பிடித்து, எப்படியாவது ஒரு project-ட்டை முடித்தால் போதும்டா சாமி என்று அடங்கி விடுவார்கள். (குறிப்பு: நான் சாதாரணப் பொறியியல் மாணவ மாணவியர் பற்றிப் பேசுகிறேன். 'எல்லோரும் அப்படி இல்லை' என்று நிஜமான அறிவுஜீவிகள் யாரும் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள்). மீண்டும் விஷயத்துக்கு வருவோம். இந்த செயற்கை அறிவில் அப்படி என்னத்தான் செய்கிறார்கள்? என்ன மாய்மால வித்தை செய்து கணினிக்கு அறிவூட்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு. இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட MIT பேராசிரியர் மார்வின் மின்ஸ்கி அவர்களுடைய இணையத்தளத்தில் சென்று என் தேடுதல் வேட்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டேன். (பிள்ளையார் சுழியைத் தவிர வேறு எதைப் போட்டேன் என்று கேட்காதீர்கள்). வீரப்பன் காட்டைப் போலப் பரந்து விரிந்திருந்த அவரின் தளத்தில், நானும், அதிரடிப் படை போல ஏதோ ஒரு மூலையில் தடவிக் கொண்டிருந்தேன். மனித மனம் எண்ணங்களைக் கையாளும் விதங்களைத் தாண்டி நான் வேறெதையும் உருப்படியாகப் படித்ததாக ஞாபகம் இல்லை. அதிலேயும், அவர் சொல்லியிருந்த சில விஷயங்கள் வித்தியாசமானதாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தன. கணிப்பொறியால் சிந்திக்க முடியுமா? – என்று பொத்தாம்பொதுவாகக் கேட்டால், ஒரு இயந்திரத்தால் எப்படிச் சிந்திக்க முடியும்? என்று ஒரு சாராரும், நிச்சயமாகக் கணினி ஒரு நாள் சிந்திக்கும் என்று ஒரு சாராரும் சர்வகாலத்திற்கும் விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அண்மையில் எழுத்தாளர் சுஜாதாவின் நூல் ஒன்றில் இக்கவிதையைக் கண்டேன்- "சொல்லடா சிவசாமி – என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் எல்.எஸ்.ஐ. தாராயோ – இந்த இன்டர்நெட் பயனுற வாழ்வதற்கே!" எதிர்காலத்தில் கணினி கவிதைகள் கூட இயற்றும் என்று எழுதியிருந்தார். இனி வரும் கணினி யுகம் குறித்த அவரின் forecast அது.மனிதன் தான் என்ன செய்கிறோம் என்கிற consciousness-உடன் செயல்படுகிறான், ஆனால் ஒரு இயந்திரமான கணினிக்கு இந்த consciousness எப்படி இருக்கும்? "நான் ஒரு கணினி. என்னை உருவாக்கியவர் கந்தசாமி. எனக்குள் 10 மில்லியன் ட்ரான்ஸிஸ்டர்கள் உள்ளன. நான் வெறும் electronic குப்பைகளின் சேர்த்தி தான். ஆனாலும் என்னால் சிந்திக்க முடியும். சிரிக்க முடியும். அழ முடியும். எனக்கும் பீலிங்க்ஸ் இருக்கிறது"- இப்படி ஒரு கணினியால் conscious-ஆகச் சிந்திக்க முடியுமா? – இதற்குப் பேராசிரியர் மின்ஸ்கி ஒரு வித்தியாசமான விளக்கம் தருகிறார். நான் நடக்கிற போது, எனக்குள் பல நூறு தசைகள் இயங்குகிறன. எத்தனையோ நியூரான்கள் ஒன்றோடொன்று கிசுகிசுத்துக் கொள்கின்றன. என் மூளை என் கை கால்களுக்கு எத்தனையோ கட்டளைகச் இடுகிறது. ஆனால், இதெல்லாம் எனக்குத் தெரிகிறதா என்ன? உதாரணத்திற்கு, நான் நேராக நடந்து மார்க்கெட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். வழியில் த்ரிஷாவின் போஸ்டரைப் பார்க்கிறேன். உடனே என் மூளையின் நீள அகலங்களில், நியூரான்களில் பதிந்து வைத
்திருக்கிற த்ரிஷாவின் முகத்தை வெளிக்கொணர்கிறது. எதிரில் இருக்கும் த்ரிஷாவின் போஸ்டரோடு ஒப்பிடுகிறது. டெஸ்ட் ஓகே என்றால், நான் போஸ்டரைப் பார்த்து ஜொள்ளு விடுகிறேன். அது கூட நான் செய்வதில்லை. என் மூளைதான் என் எச்சில் சுரப்பிகளுக்குக் கட்டளையிட்டு செயல்பட வைக்கிறது. (ஓகே ஓகே, இதெல்லாம் சொல்லி டபாய்க்கிறான் பார் என்கிறீர்களா?). மூளை என் கால்களுக்குக் கட்டளையிட, நேராகப் போய்க் கொண்டிருந்த நான், என் கால் தசைகளின் உதவியால் த்ரிஷாவை நோக்கி நடைபோடுகிறேன். "என்னைப் பார்த்துச் சொல்லு, என் கண்ணைப் பார்த்துச் சொல்லு", என்று நம்மூர் முரட்டு ஹீரோ ஸ்டைலில் கேட்கிறேன், இப்படி நீங்கள் யாராவது த்ரிஷாவின் போஸ்டரைப் பார்த்தால் நான் மேலே சொன்ன மூளை சம்பந்தப் பட்ட விஷயங்களை எல்லாம் நினைத்துப் பார்ப்பீர்களா, இல்லை, த்ரிஷாவின் பால் வடியும் அழகு முகத்தை ரசிப்பீர்களா? 'ம்ம்ம்… இப்போது மூளை கைகளுக்குக் கட்டளை இடுகிறது, இப்போது கைகள் மூளைக்கு acknowledgement அனுப்புகின்றன.' இப்படியெல்லாம் சிந்தித்து யாருக்கவது அனுபவம் உண்டா? (இருந்தால் சொல்லுங்கள், நான் உங்களுக்குச் சரியான வழி காட்டுகிறேன்) இப்படி, நம் மூளைக்குள் என்ன நடக்கிறது என்ற விஷயம் நமக்கே தெரிவதில்லை. அதற்காக, நாம் எல்லாம் சிந்திக்கத் தெரியாத முட்டாள்கள் என்று சொல்ல முடியுமா? பின் ஏன் கணிப்பொறிக்கு மட்டும் consciousness தேவை என்கிறீர்கள்? எனவே, கணிப்பொறிக்கு consciousness இருந்தால் தான் அது சிந்திக்கிறது என்பது காதில் பூ சுற்றும் செயல். Consciousness இல்லமலேயே கணினியால் மனிதன் போல் சிந்திக்க முடியும். இதை நான் கூறவில்லை. MIT பேராசிரியர் மின்ஸ்கி கூறுகிறார். சிந்திக்க வேண்டிய விஷயம். அதெல்லாம் இருக்கட்டும். டேட்டா மைனிங், டேட்டா வேர்ஹவுஸிங் என்றெல்லாம் படிக்கிறோம், செயல்படுத்தவும் செய்கிறோம். ஆனால் எங்கள் இறுதியாண்டு project report-ட்டை சி.டி.யில் போட்டுக் கொடுக்கலாமே, எதிர்காலத்தில் reference-க்கு எளிதாக இருக்குமே என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இந்த லட்சணத்தில், கணினி கவிதை இயற்றுவது பற்றியெல்லாம் வேறு பேசிக்கொண்டிருக்கிறோம். இருட்டறையில் உள்ளதடா உலகம்! பேப்பர் பென் யூஸ் பண்றவனும் இருக்கின்றானே!!

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

6 thoughts on “கம்ப்யூட்டரும் கவிதையும்”

  1. தீபக் நல்லா எழதியிருக்கீங்க. என்னுடைய இந்த பதிவு கூட உங்கள் பதிவை பார்த்தபிறகு எழுதியது தான்.
    AI -ஐ செயற்கை நுண்ணறிவு என்று தமிழில் குறிப்பிடுகிறார்கள். மேலும் பல வார்த்தைகளின் தமிழாக்கத்தை http://www.tcwords.com-ல் காணலாம்.

    Like

  2. //ரிஸர்ச், டெவலப்மெண்ட், கிரியேட்டிவிட்டி, இன்னொவேஷன், புடலங்காய் என்றெல்லாம் ஓவராகப் பீட்டர் விட்டு அலைவார்கள்.// நூலகத்திலிருந்து எடுத்த வாசனை இழக்காத புத்தம் புதிய புத்தகம் ஒன்றுடன் 😉

    Like

  3. வணக்கம். நான் இந்தப் பக்கம் புது கஸ்டமர்.

    நன்றாக உள்ளது உங்கள் அறிவியல் நொறுக்குத் தீனீ.

    muLinuxல் ferry என்று ஒரு நிரல் பயன்படுத்தி இருக்கிறேன், நீங்களும் பயன்படுத்திப் பார்த்து இருக்கிறீர்களா? arrayவில் வாக்கியத்தொடர்/வார்த்தை/வினைச்சொற்கள் எல்லாம் சேமித்து வைத்து randomஆகத் தேர்ந்தெடுத்து கவிதை எழுதும்.

    நானும் அப்படிப் பண்ணிப் பார்க்கலாமே என்று விஷுவல் பேசிக்கில் முயன்றேன். output நான் எழுதும் கவிதைகளை விட மோசமாக இருந்ததால் விட்டுட்டேன். 😉

    Like

Leave a comment