இஞ்சினீயரிங் கல்லூரி


ஒரு நாளைக்கு 30 மணி நேரம் இருந்தால் கூடத் தேவலாம். கல்லூரி project work-இன் அடங்காத் தாண்டவங்களுக்கிடையே எழுதுவதற்கு சமயம் கிடைப்பது – கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைப்பது போல் ஆகிவிட்டது. இப்போது பருவமழை – அதுதான் எழுத சமயம் வாய்த்தது. எழுதுகிறேன்… நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அப்பாவித்தனமான ஃபர்ஸ்ட் இயர் பையனாக கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து, பல சமாசாரங்களிலும் மேதாவிலாசம் பெற்று 'அடப் பாவி!' த்தனமான ஃபைனல் இயராக உருமாறியிருக்கும் இன்று வரையில் நான் செய்ததெல்லாம், சில foreign author-களும், பலப்பல லோக்கல் author-களும் புத்தகம் என்கிற பெயரில் எழுதித்தள்ளிய விஷயங்களை உருபோட்டு, எக்ஸாம் என்கிற 'நையாண்டி தர்பாரி'ல் அதை வாந்தி எடுத்துப் பாஸ் செய்தது தான். இந்த வெட்டி வேலைக்கு எனக்கு இஞ்சினீயரிங் பட்டம்! ஒரு ரேடியோவைக் கூடத் திறந்து பார்த்த அனுபவம் இல்லை எனக்கு. இதில் கம்யூனிக்கேஷன் இஞ்சினீயராம் – கஷ்ட காலம்! நான்கு ஆண்டுகள் ஒரு பொறியியல் கல்லூரியி வளாகத்தில் நானும் தினம் தினம் நடமாடியிருக்கிறேன் என்கிற அனுபவத்தில் சில விஷயங்கள் (யோசனைகள்) சொல்கிறேன். 1. கிணற்றுக்குள் இருந்து பேசுவது போன்ற குரலை உடைய நபர்களை professor-களாக அமர்த்துவதைக் கல்லூரிகள் மறுபரிசீலனை செய்யலாம். அல்லது அந்நபர்களே, சமூக அக்கறையோடு, ஆசிரியர் தொழிலிருந்து வேறு வேலை பார்த்துச் செல்லலாம் – நிச்சயமாக மாணவர் சமூகம் அவர்கள் 100-ஆண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கும். 2. லோக்கல் author என்கிற பேரில், சகட்டு மேனிக்கு கண்டதையும் எழுதும் சமூக விரோதிகள் மீது 'பொடா', 'எஸ்மா', 'நக்மா' என்று ஏதாவது பெயரில் சட்டம் போட்டு, அவர்களை உள்ளே தள்ள அரசாங்கம் யத்தனிக்கலாம். மொழிக் கொலை செய்வதைத் தடுக்க இ.பி.கோ.-வில் புது செக்ஷன்களை உருவாக்கலாம். ஒரு படு லோகல் author-இல் இருந்து சின்ன துணுக்கு இதோ: "In simple words, motivation can defined as the process of inducing the people inner drives and the action towards certain goals and committing his energies towards achieve of these goals" (நான் டைப் செய்ததில் தவறு இல்லை என்பதை கவனத்தில் கொள்க!) 3. கெமிக்கல் lab என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கம்ப்யூட்டர் lab-இல் கூட lab coat அணிந்து தான் உள்ளே வர வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனங்களை எதிர்காலத்திலாவது திருத்திக் கொள்ளலாம். 4. ஒரு சில equation-களையும், foreign author-களிலிருந்து ஒரு சில வரிகளையும் ஒவ்வொரு நாளும் மனப்பாடம் செய்து கொண்டு வந்து, கிளாஸ் முன் சிலை போல் நின்று ஒப்பிக்கும் வாத்தியார்கள்/ வத்தியாரினிகள், திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் எங்கு நடக்கின்றன என்று தேடுவதைத் தொழிலாகக் கொள்ளலாம். 5. கல்லூரியில் symposium, காலேஜ் டே, இத்யாதிகள் என்றால், புடவை கட்டிக் கொண்டு வரும் இளம்யுவதிகள், எல்லாம் தெரிவது போல் படுகுட்டையாக (skimpy) ஸீ த்ரூ ரவிக்கையும், லோ ஹிப்பில் சேலையும் கட்டி, இடுப்பசைத்து, படு செக்ஸியாக வந்து, மாணவர்களின் androgen சுரப்பிகளைச் சுண்டியிழுக்கும் வேலைகள் நியாயம் தானா என்று அவர்களுக்குள்ளேயே ப்ரைவெட்டாக ஒரு GD வைத்து முடிவு பண்ணிக் கொள்ளலாம். 6. கல்லூரியில் நடக்கும் டெக்னிக்கல் symposium-களில், ஹாலுக்கு வெளியே ரிஸ்ப்ஷனிலும், ஹாலுக்கு உள்ளே ஆடியன்ஸ்க்கு பிஸ்கட்-காப்பி கொடுப்பதற்கும், பரிசு கொடுக்கும் விழாக்களில் chief guest கையில் பரிசைக் கொண்டு கொடுப்பதற்கும், ஒரு கலருக்காக ஸ்டேஜில் நின்று குசுகுசுத்துக் கொள்வதற்கும் மட்டும் பெண் பிள்ளைகளைப் பயன்படுத்துவதும், அவர்களும் அதைப் பெரும் பேறாகக் கருதி சர்வஜன சேவை செய்வதும், அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலை என்கிற ஞானோதயம் அடைய முயலலாம். symposiu-த்தின் டெக்னிக்கல் சமாசாரமும் உண்டு என்று சற்று எண்ணிப் பார்க்கலாம். 7. சில சமயம், இருப்பது போதாதென
று, மாணவர்களைத் தூங்க வைக்க, IIT, REC, என்கிற வேற்று கிரகங்களிலிருந்து சில பிறவிகளை வரவழைத்து, guest lecture என்கிற கவுரவப் பெயரில் அவர்களும் 120-200 என்று இஷ்டத்திற்கு ஸ்லைடுகளைப் போட்டு, புரியாத விஷயத்தைப் புரிய வைக்கக் கூட யத்தனிக்காமல், அவர்கள் பாட்டுக்கு லெக்சர் கொடுக்கிற பேத்தல் சமாசாரங்களைக் கைவிட முன்வரலாம். 8. டிப்ளமோ அளவிற்குப் பெரிதாக(!) இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு ரேடியோவையோ, ஒரு டிவியையோ திறந்துகாட்டி, இது இது இன்னது என்றாவது காட்டலாம். இஞ்சினீயரிங் படித்ததற்கு ஒரு அர்த்தம் கிடைக்க வழி செய்யலாம். இன்னும் எத்தனையோ யோசனைகள் சொல்லலாம். அப்துல் கலாம் தேச முன்னேற்றத்திற்குச் சொன்ன எட்டு அம்சத் திட்டம் போல, இந்த எட்டு விஷயத்தையும் நிறைவேற்ற முயலலாம். புண்ணியம் கருதியாவது…

Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

2 thoughts on “இஞ்சினீயரிங் கல்லூரி”

 1. //கெமிக்கல் lab என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கம்ப்யூட்டர் lab-இல் கூட lab coat அணிந்து தான் உள்ளே வர வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனங்களை//
  இது கூட பரவயில்லைங்க, எங்க ஊருல இருக்கிற காலேஜ்ல புள்ளைகளுக்கு ‘க்ரே’ கலர்ல ஒரு சட்டை பேண்ட் குடுத்திருக்காங்க.. முதல் வருஷம் வாங்குன அதே யூனிபார்ம்’அ கடைசி வருஷமும் அந்த புள்ளைக போட்டுகிட்டு பஸ் ஏறி காலேஜ் போறத பார்த்தா.. (இடைப்பட்ட காலங்களில் ஏற்ப்படும் வளர்ச்சியை கவனத்தில் கொள்க.!! அந்த யூனிப்பர்ம் மேல இருக்கிற கடுப்புல இவுங்க புதுசும் தைச்சுகிறதில்லை) காலங்காத்தால..ம்ம். வேண்டாம்…

  //கல்லூரியில் நடக்கும் டெக்னிக்கல் symposium-களில், ஹாலுக்கு வெளியே ரிஸ்ப்ஷனிலும், ஹாலுக்கு உள்ளே ஆடியன்ஸ்க்கு பிஸ்கட்-காப்பி கொடுப்பதற்கும், பரிசு கொடுக்கும் விழாக்களில் chief guest கையில் பரிசைக் கொண்டு கொடுப்பதற்கும், ஒரு கலருக்காக ஸ்டேஜில் நின்று குசுகுசுத்துக் கொள்வதற்கும் மட்டும் பெண் பிள்ளைகளைப் பயன்படுத்துவதும், அவர்களும் அதைப் பெரும் பேறாகக் கருதி சர்வஜன சேவை செய்வதும், அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலை என்கிற ஞானோதயம் அடைய முயலலாம்//

  சததியமான வார்த்தை தீபக்.. நான் காலேஜ் படிக்கும் போது இதை பெரிய ‘இவன்’ மாதிரி பேச போயி வாங்கிகட்டிகிட்டது ஞாபகம் வருது.. நான் பேசுனதுக்கு புள்ளைக மத்தியலயும் சப்போர்ட் கிடைக்கலைங்க.. நான் எதோ அவுங்கள எல்லாம் ‘@#%!@#%’ மாதிரி தப்பா சொன்னதா சொல்லி.. என்க்குயரி வச்சுடாங்க.. 😦

  Like

 2. தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி திரு.ராசா…

  எல்லோரும் சரி என்று ஏற்றுக் கொள்கிற விஷயத்தை எதிர்த்துக் குரல் எழுப்பிய தங்களின் தைரியத்தைப் பாராட்டலாம். கல்லூரியில் பார்க்கிற கணக்கிலடங்காத பாரபட்சச் செயல்களில் ஒன்று தான் அது. இன்னும் எத்தனையோ… இதற்குப் பெண்களும் ஒத்துப் போவதற்குக் காரணம், அவர்கள் அழகுப் பதுமைகளாக மட்டுமே இருப்பது தான் லட்சணம் என்று சமூகம் சின்ன வயதில் இருந்து brainwash செய்கிறது. ஆண்கள் ஆளப் பிறந்தவர்கள், பெண்கள் adjust பண்ணப் பிறந்தவர்கள் என்று தீர்க்கமாக அவளுக்கு சொல்லிக் கொடுக்க்ப் படுகிறது. எழுத்தாளர் சுஜாதாவின் “எப்போதும் பெண்” படிக்கலாம். சரியான சான்று.

  பின்னே அந்த grey உடுப்பு விஷயம் எல்லா கல்லூரியிலும் இருக்கிற தலைவலி தான். ஒரு முறை துவைத்து எடுத்ததும் சுருங்கிப் போய் முக்கால் பேன்ட் ஆகிவிட்ட விஷயத்தை நானே கல்லூரிக்கு வெட்கத்துடன் அணிந்துபோனதும் உண்டு. (இதில், வொர்க் ஷாப் யூனிஃபார்ம் க்ளோஸ் ஃபிட்டிங்காக இருக்க வேண்டும் என்கிற அறிவுரை வேறு…)

  – தீபக்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s