இனி நானும் ஒரு கிராஜுவேட்டாக்கும்!


கடைசியில் ஒரு வழியாக, என்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மிகுந்த ஆரவாரம், மேளதாளம், பாராட்டுகள், பரிசுகள், கூத்து, பாட்டு என்று கல்லூரியே அமர்க்களப்பட்டு விட்டது என்று சொன்னால், அது சத்தியமாகப் பொய்தான். நான்கு ஆண்டுகளில் இதுவரை எழுதிய அறுபது பேப்பர்களில், கட்டக்கடைசியான பேப்பரை முடித்த நிறைவோடு, அதன் சாதக-பாதகங்களை டிஸ்கஸ் செய்துகொண்டே, நண்ப-நண்பிகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, வீட்டுக்கு வந்தாகிவிட்டது. ஸ்ட்யூடண்ட் வாழ்க்கையிலிருந்து, க்ராஜுவேட் வாழ்க்கைக்கு இப்பொழுதுதான் ப்ரொமோட் ஆகியிருக்கிறதால், இந்தப் புதிய அவதாரத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகள் இன்னும் பிடிபட்டபாடில்லை. காலை வேளை ‘கொக்கரக்கோ’கள் காதில் விழ வாய்ப்பு தராமல் தூங்குகிற காரியத்தை எத்தனை நாள் செய்துகொண்டிருக்க முடியும்? நண்பர்களிடம், “உருப்படியா என்னடா செய்றதா உத்தேசம்?” என்று கேட்டு, “இனிமேல் தான்டா யோசிக்கணும்”, என்பதையே எல்லோரிடமும் நித்தியமான பதிலாகப் பெற்று பெற்று அலுத்தாகிவிட்டது. என்ன பெரிதாக மாறிவிடப் போகிறது? இனி முடிதிருத்தகத்தில் சவரக்கார அண்ணாச்சி, “என்ன தம்பி, காலேஜ் லீவா?” என்று சிரத்தையோடு விசாரிக்கும் போது, “காலேஜா? அப்டீன்னா?”, என்று தெனாவட்டாகக் கூறி, சட்டைக் காலரை உயர்த்திக் கொள்ளலாம். மிகுந்த சுவாரஸ்யமான அட்வென்ச்சர் கேமை காலை 8 மணியிலிருந்து தொடர்ந்து ஆடி, மிடில் ஸ்டேஜில் மாட்டித் திக்குமுக்காடுகிற சமயத்தில், கடமைக்கார நண்பன் ஃபோன் செய்து, செல்லுலர் கம்யூனோகேஷன் பற்றியும் சாம்பிளிங் ரேட் பற்றியும் விசாரிக்கும் தொல்லைகள் இன்றி வாழலாம் (ஆடலாம்). கல்லூரி முடிந்துவிட்டபடியால், வெட்டிக்கதை பேசும் போது, சிடுமூஞ்சி புரொஃபசர், ஸீன் போடும் ஃபிகர், அக்கிரமமான அடெண்டன்ஸ் இன்சார்ஜ் போன்ற ருட்டீன் சமாசாரங்கள் தீர்ந்துபோய்விட, அரற்றுவதற்குப் புதிய விஷயங்களைத் தேடி, யாஹூவையும் கூகிளையும் நாடலாம். “ஐ அம் வெரி பிஸி”, என்று அலட்டிக் கொண்டு, ஈ-மெயில் மூலமாக மட்டுமே தொடர்பு வைத்திருந்த எதிர் வீட்டு பாஸ்கரையும், அடுத்தத் தெரு ஆண்டனியையும், ரொம்ப காலத்திற்குப் பிறகு நேரில் சந்தித்துக் குசலம் விசாரிக்கலாம். இனி வரப்போகிற ஒன்றிரண்டு மாதங்களை எப்படிக் கழிப்பது என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் காரிடரில் நின்று, வழிந்துகொண்டு ஸைட் அடித்த பெண்கள் மொத்தம் எத்தனை என்று கணக்கெடுப்பு நடத்தலாம். அந்த கம்ப்யூட்டர் ஸயன்ஸ் ஷில்பாவும், எலெக்ட்ரிக்கல் மோஹனாவும் என்றாவது ஒரு நாள் வந்து, “நீ இல்லாமல் வாழவே முடியாது”, என்று உருகுவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களை நினைத்துக் கொண்டு கவிதை வடிக்கலாம். ஹெய்சன்பர்க் தத்துவத்தில் வருகிற எலெக்ட்ரான்கள் போல, பாவம் அந்த யுவதிகள் : எத்தனைப் பேரின் கனவுகளில்தான் ஒரே சமயத்தில் தோன்றுவார்களோ தெரியவில்லை. சீ சீ, அசிங்கம் என்று பட்டால், இருக்கவே இருக்கிறது கணிப்பொறி கோர்ஸ்கள். நானும் கம்ப்யூட்டர் படிக்கப் போகிறேன் என்று தம்பட்டமிட்டு அறிவித்து, NIIT-யா, சிஎஸ்சியா, ஆப்டெக்கா என்று சம்பிரதாயத்துக்குப் பெயர்களில் மட்டும் வித்தியாசப்படும் நிறுவனங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது விளங்காமல் சாஸ்வதமாகத் தேடிக்கொண்டே இருக்கலாம். நன்றாகப் பொழுது போகும். இறுதியில், வீட்டில் ஸெல்ஃப் ஸ்டடி செய்வது தான் உசிதம் என்று எவனோ கூற, ‘லேர்ன் இன் 21 டேஸ்’ என்று போட்ட தலையணை புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்து அழகு பார்க்கலாம். எதுவுமே சரிபட்டு வராமல், என்ன செய்வது என்பதே விளங்காமல், வெறுத்துப் போன

வர்களுக்கு என்றே உருவாகியுள்ளது – கடைசி அடைக்கலமாக வருகிற யோகா கிளாஸ்; அதனோடு சேர்ந்து அடிபடும் மெடிட்டேஷன், ஆர்ட் ஆஃப் லிவிங், இத்யாதிகள். “இந்த ஹாலிடேஸ்ல உருப்படியா, முறையா யோகா கத்துக்கப் போறேன்டா” என்று டயலாக் விட்டுப் போயிருக்கும் நண்பர்கள் எல்லோரும், ‘எதுவும் செய்யாமல் வெட்டியாக இருக்கிறானே’ என்று தன் இமேஜ் பாதிக்கப்படக் கூடாது என்று யோகாவிற்குப் போகிற எக்ஸிபிஷனிஷ்டுகள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மையான யோகா அபிமானிகள் இதைப் படித்தால் மன்னிப்பார்களாக! இன்னும், கதை எழுதுகிறேன், நாடகம் போடுகிறேன், வெரைட்டி ப்ரோக்ராம் கொடுக்கிறேன், வெப் டிஸைன் செய்கிறேன் என்று சித்தம் கலங்கிக் கொக்கரிக்கும் என் போன்ற ஜென்மங்களைத் திருத்த யாரேனும் சாக்ரட்டீஸ் வருவாரா தெரியவில்லை. கிராஜுவேட் வாழ்க்கையின் axiom-கள் விளங்க இன்னும் கொஞ்சம் நாளாகும். கேரளாவுக்கும், சவுதிக்கும், நார்த்துக்கும் ரெஸ்ட் எடுக்கப் போன நண்பர்கள் திரும்பி வந்து, ELT, ட்ரெய்னிங், CBT என்று காக்னிஸன்ட்டில் அடுத்த பரிமாணத்திற்குப் பிரயாணமாகும் வரை இந்தத் தேடல்கள் அரற்றல்கள், அலுப்புகள் தொடரும்…

Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

12 thoughts on “இனி நானும் ஒரு கிராஜுவேட்டாக்கும்!”

 1. தீபக் வெங்கடேசன், வாழ்த்து.
  கல்லூரி வாழ்க்கை முடிந்தால், பிறகு எல்லாமே வம்புதான். இதிலே வேலை, மேற்படிப்பு, கல்யாணம் என்றேன் வம்பிலே வகைபிரிப்பு. பல்வம்பும் பெற்று பல்லாண்டு வாழ்க. (இடைக்கிடை மொழிபெயர்க்கிற வம்பையும் கவனித்துக்கொள்ளுங்கள்)

  Like

 2. நன்றி திரு. வாஸா…
  அப்பப்பா, இத்தனை வம்புகளா? கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்கிறேன். எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விடுகிறேன். மொழிபெயர்ப்பும் தான்! மிக்க நன்றி திரு. சுந்தரமூர்த்தி…
  –தீபக்

  Like

 3. இஸ்கோலு வாழ்க்கை முடிஞ்சு போச்சா?..வாழ்த்துக்கள்..சட்டு புட்டுன்னு வேலைலெ செட்டில் ஆகிடுங்க..ஆபீஸ் நேரத்துலே ப்ளாகு பண்ணாதீங்க..

  Like

 4. //ஆபீஸ் நேரத்துலே ப்ளாகு பண்ணாதீங்க.//
  தோடா அத யார் சொல்றா பாரு.. 🙂

  தீபக். ஒரு ஃபேர் வெல் பார்ட்டியாவது வெக்கணும்ங்க. பத்து வருஷம் கழிச்சு நெனச்சுப் பாக்க எதுவுமே இருக்காது இல்ல. 😦

  முக்கியமான ஒன்னு. வீட்டில் பெருசுங்க “வேலைக்கு போகலையான்னு” ராமாயணத்தை ஆரம்பிச்சா
  ஓடி போய் நிம்மதியா இருக்க ஒரு டீக்கடைய தேடுங்க முதலில். கூட்ஸ் வண்டிக்காரரா இருந்தா
  புண்பட்ட மனத் புகைய விட்டு ஆத்துங்க…

  ஆமா ஷில்பாவுக்கும்,மோஹனாவுக்கு நீங்க ப்ளாக் எழுதுறது தெரியாதா?

  Like

 5. @icarus
  //சட்டு புட்டுன்னு வேலைலெ செட்டில் ஆகிடுங்க//
  இதோ, இப்பவே….
  //ஆபீஸ் நேரத்துலே ப்ளாகு பண்ணாதீங்க..//
  ஓஹோ… இப்பத்தான் கொஞ்சமாக axiom-கள் புரிய ஆரம்பிக்குது.

  @ karthikramas
  //ஒரு ஃபேர் வெல் பார்ட்டியாவது வெக்கணும்ங்க//
  ஃபேர்வல் பார்ட்டி எல்லாம் எக்ஸாம்க்கு முன்பே வெச்சு முடிச்சாச்சு. (அதில்லாமலா பின்ன?)
  //ஆமா ஷில்பாவுக்கும்,மோஹனாவுக்கு நீங்க ப்ளாக் எழுதுறது தெரியாதா?//
  தெரிஞ்சா நல்ல விஷயம் தானே… அப்படியாவது என் மனக்குரல் அவங்களுக்குக் கேட்டா சரி 😉

  எல்லாருக்கும் மிக்க நன்றி…
  –தீபக்

  Like

 6. வாழ்த்துக்கள் தீபக்: அடுத்தகட்டம் சிக்கலின்றி இருக்க என் வாழ்த்துக்களும்!! தொடர்ந்து உங்கள் பதிவில் எழுதிக்கொண்டிருங்கள்…

  Like

 7. Dei,
  Nice and funny. U’ve got good potential dood. Ur style is reminding me of Sujatha (very very similar). Try writing a book da. I guess it shud keep u occupied for the next 2 months.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s