சில ஞாபகங்கள்

பின்புறத்தில் சற்றே பெருத்து, கிக் ஸ்டார்ட் செய்யப்படும் ஒரு மாதிரியான ஆட்டோக்களை என் சொந்த ஊரில் தான் பார்த்திருக்கிறேன். கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம், பெயர் 'கொப்பா'. Michael Crichton-னின் State of Fear-இல் எவ்வளவு தான் இயற்கையைத் திட்டி, கன்னாபின்னாவென்று விமர்சித்திருந்தாலும், நாலாபுறமும் மலைகள் மலைகள் என்று இருக்கிற ஊரைப் பார்க்கும் போது, மனம் அதில் லயித்து விடுவதில் ஆச்சரியமில்லை. முணுமுணுப்பது போல் வேகமாகப் பேசுகிற மைசூர் கன்னடம், மணிரத்தினம் பட வசனம் போல அவ்வளவு ஸ்பஷ்டமாகப் புரியாவிட்டாலும், சென்னை செந்தமிழைக் கொஞ்ச நாள் மறக்கடித்து விட்டதென்னவோ உண்மைதான்.  மலையிலிருந்து பொங்கிவரும் ஓடை நீரில் குளித்த போது, அங்கே மரநிழலில் ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவர்கள் இன்னும் என் கண்களில் நிற்கிறார்கள். என் சிறுவயதில் இப்படியெல்லாம் ஓடைப்புறத்தில் விளையாட வாய்த்ததில்லையே என்ற ஏக்கம் நிறைய உண்டு. சென்னையில் அதிகம் ஊஞ்சல்கள் நான் பார்த்ததில்லை. சங்கிலியில் தொங்கும் மர ஊஞ்சல்களை மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் நண்பர்கள் வீடுகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதில் எல்லாம் வாண்டுகள் விளையாட முடியாது. அவர்களின் dynamic தேவைகளுக்கு ஈடு தரும்படியாக இருப்பவை மரக்கிளையில் கட்டிய ஊஞ்சல் தான். என் வீட்டில், நான் விளையாடுவதற்காக என் தாத்தா ஒரு ஊஞ்சல் கட்டித் தந்திருந்தார் – கொய்யா மரக்கிளையில். வருடாவருடம் கட்டித்தருவார். நானும் வருடாவருடம் அதன் பிரேக்கிங் பாயிண்ட் வரும் வரை அதில் ஆடி ஆடி, சட்டென்று அது அறுந்து தொபீர் என்று நான் கீழே விழும் போது, மிகப்பெரிய சாதனை செய்தது போன்ற ஒரு பூரிப்பு உண்டாகும். இப்போதெல்லாம் கூடத் தாத்தாக்கள் மரக்கிளை ஊஞ்சல்கள் கட்டித் தருகிறார்களா என்பது தெரியவில்லை. கன்னடம் சரியாகப் பேசத் தெரியாமல், கடைக்காரரிடம் எக்குத்தப்பாகப் பேசி, பின் அசடு வழிந்த கதையை முன்னொரு பதிவில் சொல்லியிருக்கிறேன். அது அப்படி என்றால், இன்று கூட, பள்ளி வகுப்பில் என்னோடு படித்த தோழியிலிருந்து, எனக்கு சுரம் வந்தால் ஊசி போடும் டாக்டர் வரை எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி, நீ இப்போதாவது தமிழ் பேசக் கற்றுக்கொண்டாயா?என்பதுதான். இருந்தாலும், ராஜ் டிவி கோலிவுட் டயரியைத் தொகுத்து வழங்கும் பெண் பேசும் டமிலை விட, என் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு, நகர்ந்துவிடுவேன். ஊரில், மலைச்சரிவை ஒட்டியே கட்டப்படும் வீடுகளும், வீட்டுக் கொல்லையில் விடியற்காலை வந்து கிரீச்சிடும் மயில்களும், நாலடிக்கு ஒன்றாக அகப்படும் பாம்புகளும், தோட்டத்தில் காலில் ஒட்டிக் கொள்ளும் அட்டைகளும், ராத்திரி வேளைக் கார் பயணங்களில், ஆங்காங்கே அமைதியாக சாலையைக் கடக்கும் சிறுத்தைகளும், சில சமயம் அரிதாகத் தென்படும் யானைகளும், மரமேனிகள் அனைத்திலும் நட்சத்திரமாய் ஜொலிக்கும் மின்மினிப்பூச்சிகளும், சென்னைக்கு வந்தால் மிகவும் ரிமோட்டாகப் படுகின்றன. ghat section என்று சொல்லி, மெதுவாக, ஸ்டியரிங்கை ஒடித்து ஒடித்து ஓட்டும் லாவகம், உஸ்மான் ரோட்டிலும், கோடம்பாக்கம் ஹை ரோட்டிலும் கூடத் தேவைப்படுவது தான் ஒரே ஒற்றுமை. பல வருடங்களுக்கு முன்னால், நான் சென்றிருந்த போது, ஊர்க்கோயில் திருவிழா நடைபெற்றதுண்டு. அங்கே, 'ஜாத்ரே' என்பார்கள். மெட்ராஸிலிருந்து சென்றவன் என்கிற முறையிலும், அவ்வூரில் பிரசித்தமான குடும்பம் என்பதாலும், திருவிழாவிலும் ஊரிலும் எனக்குப் பல சலுகைகள் நிச்சயம் உண்டு. வாட்ச் மிட்டாயும், மேஜிக் கண்ணாடியும் இலவசமகப் பெற்றிருக்கிறேன். ச
கரித்து வைத்திருந்த WWF கார்டுகளை எக்ஸ்சேஞ்ச் செய்து, மயிற்பீலியும், பாட்டிலில் அடைத்த மின்மினிப்பூச்சியும் வாங்கியிருக்கிறேன். நான்கு பென்ச் போட்ட பெட்டிக்கடை ஹோட்டலில் ராகி மால்ட்டும், கட்பட் ஐஸும் (நம்மூர் ஃபலூடா), மசால் மண்டக்கியும் (அரிசிப் பொரி) கேட்பாரின்றி விழுங்கியிருக்கிறேன். துங்கா நதிக்கரையோரம் முழுதும் நிரம்பிய கூட்டத்தின் நடுவே வாணவேடிக்கைகளைப் பார்த்து, ஆவென்று வாய்பிளந்து ரசித்திருக்கிறேன். திருவிழாவில் தொலைந்திருக்கிறேன். கிணற்றில் நீந்தியிருக்கிறேன். மாட்டுவண்டி ஓட்டியிருக்கிறேன். சைக்கிளில் ஸ்கூலுக்குப் போய், ஸ்கூல் லீடர் என்ற பெயரில் கொஞ்சம் பஞ்சாயத்தெல்லாம் செய்து, நண்பர்களை விரட்டி ஆடி, குரூப் பையன்களையும் பெண் பிள்ளைகளையும் குச்சியால் அடித்து மிரட்டி, லன்ச் பிரேக்கில் ஹோம்வொர்க் செய்து, பெல் அடித்ததும் சைக்கிளிலேயே வீடு திரும்பி, டிவி முன் ஐக்கியமாகும் சமர்த்தான சென்னைப் பையனாக வளர்ந்த எனக்கு, ஊரும், திருவிழாவும், வயல் வரப்பும் மறக்க முடியாத அத்தியாயங்கள். ஆனால், இப்போதெல்லாம் ஊர் மாறவில்லை. திருவிழா மாறவில்லை. வயலும் கிணறும்

Advertisements
Post a comment or leave a trackback: Trackback URL.

Comments

 • icarus prakash  On May 31, 2005 at 5:33 pm

  arumai….

 • பதிவைப் படிக்க ஆரம்பிக்குமுன் படத்தில் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் குண்டப்பா நீங்கள் தான் என்று நினைத்தேன் 🙂

  நல்ல நினைவலைகள்.

 • @ சுந்தரமூர்த்தி, என் நண்பனும் இதையே சொன்னான். 🙂
  நன்றி icarus

 • படிக்க சுகமாக இருந்தது. நன்றாக எழுதுகிறீர்கள் தீபக்!

  பொறாமையாகவும் இருந்தது. 😉

  நானும் அந்தப் புகைப்படத்தில் இருப்பது நீங்கள் என்றுதான் நினைத்தேன். 😛

  -மதி

 • மிக்க நன்றி திரு மதி கந்தசாமி… 🙂

 • திரு திருன்னு முழிக்க வைச்சுட்டீங்க தீபக்.

  என் பெயர் சந்திரமதி.

  பேசாம மதி’ன்னே சொல்லியிருந்தா, இந்தப் பிரச்சினை வந்திருக்குமா? 😉

  -மதி

  மதி மதி மதி

 • KARTHIKRAMAS  On June 2, 2005 at 1:17 am

  படிக்க நன்றாக இருந்தது.

 • தீபக், உங்கள் எழுத்து நடை இயல்பாய் அருமையாய் இருக்கிறது. நன்று. இந்தப் பதிவும் நன்று.

 • ஓஹோ, மதி, மன்னித்து விடுங்கள்…
  நீங்கள் மதி மதி என்று மீண்டும் மீண்டும் எழுதியது, படவா… மிதி மிதி என்று மிதிப்பது போல இருந்தது… ஹிஹி 🙂

  மிக்க நன்றி karthikramas & செல்வராஜ்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: