அவந்திகா

நீங்கள் அவந்திகா மாதிரிப் பெண்ணை எங்கும் பார்த்திருப்பீர்கள். பறக்கும் ரயிலின் சன்னலோரத்தில் செல்ஃபோனில் குசுகுசுக்கும் போது, தோளில் ஹேண்ட்பேக்கோடு பேருந்து நிறுத்தத்தில் வாட்சைத் திரும்பத் திரும்ப நோக்கு(லுக்கு) விடும் போது, சத்யம் தியேட்டர் வாசலில் நண்பர்கள் கூட்டத்து அரட்டையில் ஐக்கியமாகிப் போயிருக்கும் போது, வால் பிடித்துச் செல்லும் சென்னை ட்ராஃபிக்கில் ஸ்கூட்டியை செலுத்தும் சாகசத்தின் போது, இன்னும் பல இடங்களில், இன்னும் பல சந்தர்பங்களில்… இப்போது நீங்கள் அவந்திகாவைப் பார்க்க வேண்டியது, கடைசியாகச் சொன்ன ஸ்கூட்டி பயணத்தில். வெள்ளையில் பூப்போட்ட சுடிதார், பச்சை நிற துப்பட்டா, தோளில் ஹேண்ட்பேக், அதற்குள் ஒரு சிறிய பர்ஸ், அதற்குள் ஒரு சின்ன என்னவோ-வில் செல்ஃபோன். அனைத்தும் ஸ்கூட்டி ஸீட்டில், ஸ்கூட்டி சாந்தோம் சாலையில்! சாந்தோமில் இருக்கும் தன் வீட்டிலிருந்து கிளம்பி, க்ரீன்வேஸ் சாலை வழியாக திருவான்மியூருக்குப் பயணம். பீக் ட்ராஃபிக்கின் நடு சென்டரில் மாட்டித் தவிக்கும் மோட்டார் பைக் அந்நியன்களின் பெருமூச்சுகளுக்கும் ஏக்கப் பார்வைக்கும் நடுவில், லேட்டாக வந்தாலும், அவந்திகா, மஞ்சள் கோட்டைத் தாண்டி, சிக்னலுக்காகக் காத்திருப்போர் பட்டியலை மதியாமல் முன்னே நிற்கும் வாகன அணிவகுப்பின் முகப்பிற்குச் செல்ல, சரியாக சிக்னல் பச்சை! விருட்டென்று ஸ்கூட்டியின் காதைத் திருக, ஸ்கூட்டி எல்லோரையும் முந்தி வேகமெடுக்கிறது. சென்னை சூரியனின் மிராஜ்களைத் துளைத்துப் பாய்கிறது. சென்னைதான் எவ்வளவு மாறிவிட்டது. எல்லா நாட்களிலும், எல்லா சாலைகளிலும், ட்ராஃபிக்! ட்ராஃபிக்! ட்ராஃபிக்! நிரம்பி வழியும் பச்சைப் பேருந்துகள் – மினி இந்தியாக்கள்! "யாகாவா ராயினும்…." என்று வெள்ளைத் தகட்டில் அடித்து வைத்திருக்கும் MTC குறளின் கண் முன்னே சென்னைவாசிகளின் தற்கால வரலாறு முழுதும் கடைவிரிப்பு. மாமா ஓரகடத்தில் பிளாட் வாங்கியதிலிருந்து, பிரகாஷ் நளினியை சைட் அடித்தது வரை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள MTC-கள் உபயம். செவிக்குணவில்லாத போது விழிக்கு உணவு போடும் சுவரொட்டிகள். குமுதம் குமுதம் குமுதம் குமுதம் நக்கீரன் நக்கீரன் நக்கீரன் கல்கி கல்கி கல்கி என்று வரிசையாக. எல்லாவற்றிலும் சிரிக்கும் சோனியாகள், தியாக்கள், சில சமயம் ஆதிகேசவன்கள். எல்லா ஆரவாரத்துக்கும் மௌன சாட்சியாக நிற்கும் பிரம்மாண்ட ஹோர்டிங்குகள். அவற்றைக் கட்டி மேய்க்கிற மாதிரி மேலே இருந்து சிரிக்கும் தகிக்கும் சூரியன். இவை எல்லாவற்றையும் புறக்கணித்து, தன் ஸ்கூட்டியில் பறக்கிற அவந்திகா! திருவிக பாலத்தில் போகும் போதே அடையாறு ஃப்ளைஓவரில் ஸ்கூட்டியில் பறப்பதைக் கற்பனையில் ஓட விடுகிறாள். எதிலும் ஃபாஸ்ட்! சலனமின்றி கடலைத் தொடும் அடையாறு அவள் கண்களின் கவனத்தைக் கவர்ந்தது அரை நொடிதான். பின் மீண்டும் சாலை. ஃப்ளைஓவரில் ஏறி, அங்கு எல்லா சமயமும் தனக்கே உரியதாய் சாலையின் நடுவில் 1985 ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருக்கிற வழுக்கை விழுந்த ரிடையர்ட் க்ளார்க்கை ஓவர் டேக் செய்வது எப்படி என்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டே ஃப்ளைஓவரை நெருங்க, முன்னாலேயே சட்டென்று இடது பக்கம் திரும்பி விடுகிறாள். அங்கே நிற்பது ப்ரீத். "ஹாய் ப்ரீத்!" ஸ்கூட்டி நின்று விடுகிறது. "ஹேய் அவந்தி! எங்கே?" "சும்மா தான். நம்ம ஷாலு இல்ல, அவளுக்கு நெக்ஸ்ட் மந்த் மேரேஜ். கொஞ்சம் ஏர்லி தான். US மாப்ளெ. டெலிஃபோன் பண்ணா. அதான் சும்மா போய் பார்க்கலாம்னு… நீயும் வாயேன் ப்ரீத்?" "எனக்கு சொஞ்சம் வேலை இருக்கு. விசா இன்டர்வ்யூக்கு ரெடி பண்ணனும். பெஸன்ட் நகர்ல எங்க அங்கிளைப் பார்க்கணும்&
quot
; "ஏறிக்கோயேன். உன்னை ட்ராப் பண்றேன்" "இல்லை பரவாயில்ல. உனக்கு தான் சுத்து" "ஆமாம். இவனை ட்ராப் பண்றதுனால அம்பானி கூட எனக்கு அப்பாயிண்ட்மென்ட்க்கு லேட் ஆகுது பாரு… சும்மா ஏறுடா" ஸ்கூட்டி இருவரையும் சுமந்து கொள்கிறது. ஃப்ளைஓவர் எதிர்பார்ப்புகளை மறந்து, அதன் அடியில் சாலையில் சென்று, மறுபடியும் சிக்னல்! ஒரு வழியாக பெஸன்ட் நகரில் ப்ரீத்தை உதிர்த்து விட்டு, ஷாலுவின் வீட்டை நோக்கி ஸ்கூட்டியைச் செலுத்துகிறாள். எம் ஜி ரோடில் ட்ராஃபிக் சற்று அதிகமாகவே இருக்கிறது. ரெஸ்டாரண்டுகளில் எல்லாம் ஒட்டி உட்கார்ந்த இரட்டை உருவங்கள் சன்னமாக ஏதோ பேசிக்கொண்டுள்ளன. ஃபுட் ஜாயிண்ட் எதிரில் வண்டியில் வெள்ளரிக்காய் விற்பவன் ரோட்டில் உலாப் போகிற யுவதிகளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே "வெள்ளரீ… வெள்ளரீ…" தெருவோரப் பெட்டிக்கடையில் வேளாங்கன்னி மாதா பொம்மைகள். பேக்கரியில் பஃப்ஸ் சாப்பிடும் ஸ்கூல் பையன்கள். ரோட்டைக் கடக்கும் முதியவர். இதோ… அவந்தியை ஓவர்டேக் செய்கிற அந்த யமஹாவில் இரண்டுபேர்… அய்யோ, அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஓ மை காட்! சட்டென்று அவந்தியின் உடம்பெல்லாம் அட்ரினாலின். கழுத்தில் ஒரு சிராய்ப்பு. "ஹேய் ஹேய் என்னோட செயின்…. செயின்…. திருடன்! திருடன்!!" அவந்தியின் அலறல் கேட்டு அக்கம்பக்கம் இருப்போர் சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார்கள். அவந்தி ஸ்கூட்டியை நிறுத்திவிடுகிறாள். அந்த யமஹா திருடர்கள் அதோ… இருபதடி தூரத்தில். வாகனக் கூட்டங்களை விலக்கிச் செல்ல எவ்வளவு பிரயத்னம் அவர்கள் செய்கிறார்கள். ஹாங்க்! ஹாங்க்! ஓயாமல் ஹாரன்கள். MTC-யில் பிரசங்கங்கள் நிறுத்தப்பட்டு, எல்லா தலைகளும் ஜன்னலுக்கு வெளியே. அவந்தி என்ன செய்யப்போகிறாள்? யாரேனும் ஏதேனும் செய்கிறார்களா? இன்னும் இன்னும் வெற்றுப் பார்வைகள். முன்னேறும் யமஹா…. ஸம்படி டூ ஸம்திங்! சாலையைக் கடந்த முதியவரைத் தொடர்ந்து ஒரு பள்ளிப் பிள்ளைகள் கூட்டம். சாலை மூன்று வினாடிகளில் ப்ளாக்ட். ட்ராஃபிக்! அதோ ட்ராஃபிக்கில் அந்த யமஹா. அவர்களுக்கு சந்து கிடைக்கவில்லை. இருபதடியில் நிற்கிறார்கள். திடீரென்று தோன்றுகிறது அவந்திக்கு. ஸ்கூட்டியின் காதைப் பலமுள்ளமட்டும் திருகுகிறாள். ஸ்க்கூட்டி விருட்டெனப் பாய, கால் நொடிக்கு அவளை நிறுத்திப்பிடித்த இனர்ஷியா விலகிட, அவளும் பறக்கிறாள். அவந்தி… இன்னும் வேகமாக! பதினைந்து அடி… பன்னிரண்டு… பத்து… ஏழு… ரெண்டு… சடார்! அவந்தியின் ஸ்கூட்டி இடிக்கிற இடியில் யமஹா கொஞ்சம் பேலன்ஸ் மிஸ். அதற்குள் க்ளியராகிவிடுகிறது ட்ராஃபிக்… கிடைத்த சந்தில் பாய நினைக்கும் யமஹா… ஸ்கிரீரீரீரீரீச்ச்ச்ச்ச்!!!! ஸ்கிட் ஆகி சாலையோரத்திற்கு சரிகிறது. இதற்குள் தைரியம் வந்த சில பொதுஜனங்களின் கையில் அந்த யமஹா ஆசாமிகளின் காலர். அவர்களின் முதுகில் தர்ம அடி! தன் ஸ்கூட்டியைப் புறக்கணித்து ஜனத்திரளை நோக்கி ஓடுகிறாள் அவந்தி. "யூ ப்ரூட்ஸ்! செயினைத் திருடினா சும்மா விட்டுடுவேன்னு நினைச்சீங்களா? ராஸ்கல்ஸ்!" தன் ஹீல்ஸ் காலால் அவர்களை நாலு மிதி மிதிக்கிறாள். அதோ அவன் கையில் அவந்தியின் செயின். "டேய் நாதாரி பாப்பாவோட செயினைத் தாடா சோமாரி! இந்தாக் கண்ணு. இவனுங்களையெல்லாம்…" தன் செயின் கிடைத்து விடுகிறது அவந்திக்கு. தன் செயின்! அப்பா அவளுக்கு ஆசையோடு வாங்கிக் கொடுத்தது. தேங்க் காட்! ஒரு நிமிஷம் கலங்கியே போய்விட்டாள். என்ன வேகம்! என்ன பாய்ச்சல்! என்ன தைரியம் அவனுக்கு… அவளுக்கு. இந்த மாதிரியெல்லாம் கூட சென்னையில் நடக்கிறதா என்ன? இவனை…. ரிலக்ஸ்! ரிலாக்ஸ்! அதற்குள் அங்கு வருகிற கான்ஸ்டேபிள் கையில் அந்த யமஹா திருடர்கள். ஜனத்திரளின் ஊடே நகர்ந்து ஸ்கூட்டியை அட

ைகிறாள் அவந்திகா. சே! ஸ்கூட்டி முன் பகுதியில் ஒரு சொட்டை விழுந்திருக்கிறது. ஆனால் செயின் கிடைத்து விட்டதே. அது போதும். செயினை விட்டிருந்தால் ஸ்கூட்டி பழுதாகி இருக்காதோ? ம்ஹூம்! அந்தத் திருடனுக்கு தண்டனை தேவைதான். என்ன தைரியம் இருந்தால் ஒரு பெண்ணின் செயினை நடு சாலையில் திருடுவான். அதுவும் அவந்தியின் செயினை! முட்டாள்கள்! இல்லை… கிராதகர்கள். அவள் செய்தது சரிதான். Prodigal son கதை ஏனோ அவள் நினைவுக்கு வருகிறது. தன் ஸ்கூட்டியை முன்னே செலுத்துகிறாள். "ஷாலூ! ஸாரிடா! நான் அப்றம் உன்னை சந்திக்கிறேன். ஒரு பெரிய மேட்டர். வீட்டுக்குப் போனப்றம் சொல்றேன்" ஸ்கூட்டி வீட்டு வாசலில் நின்றதும் நிற்காததுமாய், உள்ளே டெலிஃபோன் அடிக்கிறது. அவந்திகா தன் சமீபகால சாகசங்களைத் தன் துள்ளலிலேயே விளம்பரப்படுத்துகிறாள். ஓடிச் சென்று, ரிஸீவரை எடுத்து, "ஹலோ." "ஏய் அவந்தி, இன்னிக்கு ஈவ்னிங் நாங்கள்ளாம் பிக்சர் போறோம், நீயும் வரியா?" "ஷ்யூர்! கண்டிப்பா வரேன். ஆமா… என்ன பிக்சர்?" "மிரட்டல் அடி!"

Advertisements
Post a comment or leave a trackback: Trackback URL.

Comments

 • Badri  On June 24, 2005 at 4:43 pm

  interesting narration.

  நிறைய எழுதி பத்திரிகையில் கதைகள் வர வாழ்த்துகள்.

 • ??? ???????? (Mathy)  On June 24, 2005 at 5:49 pm

  நல்லா எழுதியிருக்கீங்க தீபக்

 • Desikan  On June 24, 2005 at 6:36 pm

  தீபக்,

  இன்று தான் உங்கள் வலைப்பதிவை பார்த்தேன். சிலவற்றை படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
  நிறை எழுதவும். மற்றவற்றை படித்துவிட்டு தனிமடல் அனுப்புகிறேன்.
  ./தேசிகன்

 • ????? ??????????  On June 24, 2005 at 10:40 pm

  மிக்க நன்றி badri, mathi & desikan.
  @badri: பத்திரிகையிலா? அய்யோ, அதெல்லாம் பேராசை. எனக்கில்லை.
  @தேசிகன்: உங்கள் மடல் கிடைத்தது. எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. மிக்க நன்றி

 • viji  On July 26, 2005 at 10:05 am

  hey./.. long time da… epdi pochu unnoda plays elaam?

 • Pradeep  On July 27, 2005 at 9:41 am

  Hi da, This is Praeep from orkut. Awesoem article da. Looks like u r another Sujatha in the making. Kalakku da, focus on writing. Pesama CTS,VLSI ellam vittudu. Periya writer a vaa.
  Vaazhthukkal

 • Pradeep  On July 27, 2005 at 9:51 am

  Dei, can i crosslink ur blog to mine ( pradeepktr.blogspot.com ) .

 • Anonymous  On July 25, 2006 at 12:52 pm

  Looking for information and found it at this great site…
  binge eating disorder and topamax Does taking clomid make you ovulate earlier

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: