சுஜாதாவின் சில்வியா

வெகு நாள் கழித்து விகடனில் சுஜாதா அவர்கள் புதிய தொடர்கதை எழுதுகிறார் என்று கேள்விப்பட்ட அடுத்த நொடி ஓடிச் சென்று விகடன் வாங்கி விட்டேன். சுஜாதா அவர்களின் எழுத்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்பதால் பல எதிர்பார்ப்புகள் எனக்கு. அதிலும் கணேஷ் வசந்த் நாவல் என்பதால் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகவே இருந்தது.

வழக்கம் போல் கலர் கலராக படம் போட்டிருந்த விகடனின் டெம்ப்டேஷனை எல்லாம் தாண்டி, சுஜாதா பக்கத்திற்கு வந்தேன். கிடைத்தற்கரிய செப்பேடு கிடைத்துவிட்டாற்போல வாசிக்கத் தொடங்கினேன். கதை எனக்குப் பரிச்சயமான ஜி.என்.செட்டி ரோட்டில் தொடங்குகிறது. பொதுவாக சுஜாதா நாவல்களை வாசிக்கும்போது இருக்கும் ‘அட…’ என்ற ஃபீலிங் இதில் அவ்வளவாக இல்லை. சுஜாதா தம்முடைய வழக்கமான க்ளீஷேக்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக கதையோடும் நடையோடும் ஒட்டி விளையாடும் அவருடைய நையாண்டிகள், இதில் கொஞ்சம் ஓவர் யூஸ் செய்யப்பட்டது போல தோன்றுகிறது. எனக்கு மட்டும் தான் இப்படித் தோன்றுகிறதா, இல்லை வாசகர்கள் பலருக்கும் இதே கருத்து இருக்கிறதா என்று தெரியவில்லை.

‘டைலாமோ’ பாடல், கானா உலகநாதன் – என்று இன்றைக்கிருக்கும் சென்ஸேஷன்களைத் தான் ஃபாலோ அப் செய்வதை வலுக்கட்டாயமாகப் பிரகடனப்படுத்தாமல் இருந்திருக்கலாம். இன்னும் அவருடைய அதே பாணியைத் தான் கையாள்கிறார் என்றாலும், சிறு தொய்வு தெரிகிறது. பொதுவாகப் பெண்களிடம் “உங்களை ஒரு அரங்கேற்றத்தில் பார்த்திருக்கேன்” என்று சொல்லிக் கடலை போடும் வசந்த், இதில், “உங்களை ஒரு ரேம்ப்வாக்கில் பார்த்திருக்கேன்” என்று சொல்வது ஒரு முன்னேற்றம் 🙂

மற்றபடி இக்கதையின் தொடக்கம் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. சுஜாதா எழுதினாரா, இல்லை, சுஜாதாவின் நடையில் எழுதத் துடிக்கும் எண்ணற்றவர்களில் யாரோ எழுதினார்களா என்று எண்ணும்படி உள்ளது 😦 அவர் நடையிலேயே சொல்வதென்றால், ஜல்லியடிக்கிற சமாசாரம் தான். “அப்படீன்னா?” என்றார் வசந்த். “அப்படியா?” என்றார் கணேஷ். -ரசிக்கும்படி இருந்ந்தது.

சுஜாதாவை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு ஞனமோ அனுபவமோ இல்லை என்றாலும், அவரின் நீண்ட நாள் ரசிகன் என்ற முறையில் என் கருத்துகளைத் தான் பதிந்தேன். முதல் அத்தியாயம் தான் முடிந்திருக்கிறது. இன்னும் போகப் போக அவருக்கே உரிய ஸ்டைலில் கதை நகரும் என்று நம்புவோம்.

Advertisements
Post a comment or leave a trackback: Trackback URL.

Comments

 • 3Signs  On May 16, 2006 at 12:39 pm

  சுஜாதாவின் ஆரம்பம் unfortunately சுமார் தான் தீபக் !!

 • சுரேஷ் கண்ணன்  On May 16, 2006 at 12:44 pm

  I Agree

  – Suresh Kannan

 • valli  On May 18, 2006 at 12:25 pm

  you are right. அவருடைய துர்கா இன்னும் கொஞசம் வேகம் இருந்தது. பார்க்கலாமே.

 • Jaggy  On May 19, 2006 at 6:47 pm

  Hi Deepak,

  Nice to see U back…
  Keep Blogging…
  Y u started a new blogging instead of staying in ur old den…?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: