இப்போது தான் ஈ அடிக்கிறேன்


ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து – ‘E’ தான். ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பது போல், ‘E’ இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி. E – ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, குடலுக்குள் இருக்கிற ‘E’.coli பாக்டீரியா தான் காரணமாக இருக்கிறது. இந்தத் தகவலையெல்லாம் என் கணிப்பொறியில் உள்ளீடு செய்வதற்கு E-கலப்பை என்ற மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறேன். ‘ஈ’ என்ற பெயரில் நயந்தாரா நடித்தப் படம் வந்து சக்கை போடு போடுகிறது. E என்ற பெயரில் கணிப்பொறி மொழி கூட உள்ளது.

கணிதத்தில் ‘e’ என்பது natural logrithms-ஐக் குறிக்கிறது. பள்ளிக்கூடத் தேர்வில் இந்த விஷயத்தைப் பக்கத்தில் இருக்கும் பையனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதினால் ‘ஈ’ அடிச்சான் காப்பி என்கிறார்கள். அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் புகழ் பெற்றதே ‘E’-யின் மதிப்பைச் சொல்லித்தான். இசையின் ஏழு ஸ்வரங்களில் ‘E’ தான் மூன்றாவது ஸ்வரம். ‘E’ என்ற எழுத்து குறிக்கிற electric field இல்லையேல் மின்சாரம் இல்லை, மின்னணுவியல் இல்லை, மின்காந்த அலைகள் இல்லை, டிவி, ரேடியோ, மொபைல், இணையம் – எதுவுமே இல்லை.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? E என்பது நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வதற்குச் சமீபத்தில் தான் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.

பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கவிதை எங்கேயோ படித்திருக்கிறேன் (தினத்தந்தி – குடும்ப மலர் என்று நினைக்கிறேன்). இன்னும் வரிகள் நினைவிலிருக்கிறது. வ்டித்தவர் பெயர் நினைவில்லை.

ஒன்றாய் இருந்த போது ஒட்டத் தெரியாத இதயம்,
ஒதுங்கிச் இருக்கும் போது ஒன்றிடத் தவிக்கிறது.

அது போல், E-யின் அருமை E இல்லாத போது தான் தெரிந்தது. என் அலுவலகக் கணிப்பொறியின் கீபோர்டில், E என்ற எழுத்து மட்டும் ஒரு பதினைந்து நாட்களாக வேலை செய்யவில்லை. அதனால், E அடிக்க முடியாமல் நான் ஈ அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் E பற்றி அறிந்து கொண்டேன்.

கடைசியாக என் கீபோர்டை மாற்றிவிட்டார்கள். அலுவலகத்தில் இப்போது நிம்மதியாக E அடித்துக் கொண்டிருக்கிறேன்.

Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

7 thoughts on “இப்போது தான் ஈ அடிக்கிறேன்”

 1. முனு என் நண்பர் ஒருவரின் வீட்டு கணிணியில் U அடிக்க முடியாது, அந்த எழுத்தை ஓர் நோட்பேட் ஃபைலில் இருந்து தேவையானபோது கட் பேஸ்ட் செய்துகொள்வார்.

  மற்றபடி ஆர்குட்டில் ஃபேன் ஆக போட்டதற்கு நன்றி. 🙂

  Like

 2. கிஷோர், நான் ஆஃபீஸில் 15 நாள் அப்படித்தான் செய்துகொண்டிருந்தேன். இப்போது தான் மாற்றினார்கள். அப்போதே எழுத நினைத்து இப்போது எழுதினேன். ஹிஹி… 🙂

  Like

 3. dey ! ella E adikara vithaya pathi sonna sari ! aana officela worke illama
  E adichitirukiye atthha sonniyaaa ????..

  but the other E’s are better than office E’s . .
  i liked it . . Mindla vachikiren !!

  Like

 4. First Ever Indian Language Electronic Datasheet Website
  Fourth In Asia
  TAMIL DATASHEETS
  தமிழ் தரவுத்தாள் தளம்
  http://www.tamildata.co.cc
  தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s